இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் போராடாது: நடிகர் விஷால்

vishal_001இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையிலோ, காவிரி பிரச்சினையிலோ நடிகர் சங்கமானது போராட்டத்தினை நடத்தாது எனவும். இருப்பினும் தனது ஆதரவு தனிப்பட்ட முறையில் இருக்கும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிலளித்துப் பேசினார்.

இதன் போது அவர், அரசியல் பிரச்சினைகளில் பெரும்பாலும் நடிகர் சங்கமானது தலையிடாது. குறிப்பாக காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது என்று தெரிவித்தேன்.

அதற்காக என் வீட்டின் முன்பு போராட்டம் நடித்தினார்கள். ஆனால் இந்த விவகாரங்களில் அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதேவேளை, இலங்கைத் தமிழர்  பிரச்சினையைில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. என்பதை நான் தெளிவாக கூறுகின்றேன். ஆனால் இதற்கு நடிகர் சங்கமானது ஆதரவு தராது என்று குறிப்பிட்டார்.

வரும் சட்டசபை தேர்தலில் அரசியலில் நுழையும் எண்ணம் துளியுமில்லை.” என்று விஷால் தெரிவித்தார்.

தற்பொழுது கதகளி படத்தில் நடித்துவருதாகவும், இனிவரும் காலங்களில் ராதரவி என்ன சரத்குமார் கூடவும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நடிப்பேன் என்றும் குறிப்பிட்ட அவர், தனது திருமணம் பற்றியும் பேசியிருக்கின்றார்.

காதலித்து திருமணம் செய்யவுள்ளதாகவும், அது ஒரு நடிகையாக கூடவும் இருக்கலாம். தவறில்லை. வெகுவிரைவில் அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com