தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
இந்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் முதலாவதாக சூர்யா, கார்த்தி ஒன்றிணைந்து சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷும், தனது சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.
இதற்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தலைவர் நாசரிடம் வழங்கினார். இந்த தொகை நடிகர் சங்கம் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
-http://cinema.maalaimalar.com
வாழ்த்துகள்! சிலர் தெரிந்து செய்கிறார்கள். சிலர் தெரியாமல் செய்கிறார்கள். அனைவருக்குமே நமது வாழ்த்துகள். ஆனாலும் இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு போகின்ற பணம் முதலைவாயுக்குப் போகின்ற பணம் என்பது இன்றைய நிலைமை. இப்படி செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட இடத்தை தத்தெடுத்து அந்த இடங்களில் முற்றிலுமாக சீர்படுத்த நடிகர்கள் முயற்சிக்கலாமே!
வாழ்துக்கள்! இனி மற்ற நடிகர்களும் நன்கொடைகளை வழங்கி மக்களின் துன்பத்தை சற்று குறைக்கலாம்.நிதி முறையாக மக்களிடம் போய் சேறுவது உறுதி செய்யப்படவேண்டும்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 10 லட்ச ருபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் மூலமாக அளித்துள்ளார். தமிழர்களின் நலனுக்காக முதல் ஆளாக நிற்பவர் நமது தலைவர் ரஜினிகாந்த். இந்த பதிவு நமது ரசிகர்களுக்காக இங்கு பதிவிடப்படுகிறது, விளம்பரம் இல்லாமல் உதவி செய்யும் நமது தலைவரின் நற்குணத்தை புரிந்து கொள்ளாத சிலர், தலைவர் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார், என்ன செய்தார் என்று நமது ரசிகர்களை கேட்டு கொண்டிருக்க, நமது ரசிகர்கள் இப்போது விஷமிகளுக்கு பதிலடி கொடுத்து
வாயை இந்த பதிவின் மூலம அடைத்துள்ளனர். வாழ்க தலைவர் ரஜினி, வாழ்க் அவர் வள்ளல் குணம், வாழ்க தமிழ் மக்கள்.
இதையும் போடுங்கள்
ருபாய் (5 கோடி செலவில் ரோல்ஸ் ராய் ) கார் !…குரூப் போட்டோவோடு ஆட்டு புளுக்கை ருபாய் 5 லட்சம் நன்கொடை… பெரிய மனசிலே உனக்கு ….! ( Ltamil . com )
நல்ல மனிதன் அவர் ..ஒரு முக்கிய குறிப்பு .அவர் வெள்ளம் ஏற்பட்ட நேரம் பார்த்து மலேசியாவில் படபிடிப்பில் இருந்தார் .அதனால் இயலாமல் போயிருக்கும்.
லேட் அனாலும் லெட்ட அனாலும் வைடாக தன் கொடுத்து இருக்கிறார் .வாழ்க அவர் …எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும்.பிடிக்காத நடிகர் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பது கூடாது .தன்னுடைய மனம் கவந்த நடிகரின் படம் நன்றாக ஓட வேண்டும் என்று நினைப்பது சரி ..அனால் தன் மனசிக நடிகரின் எதிர் போட்டியில் நிற்கும் ஒரு நடிகரின் படம் ஓடவே கூடாது என்றல் அது மிக தவறு .ஒரு மானிட நேயம் illata மகா கேவலமான எண்ணம். அது அவர்களுடைய நேரம் ,ஓட்டு மொதமாக ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். எந்த ஒரு படம் நன்றாக ஓடினாலும் அந்த பெருமைக்கு உரிய நபர் இயக்குனர் மட்டுமே ,நடிகர் அஜித் சொல்லுவது போல் அவருடைய படம் நன்றாக ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மட்டுமே அவர் வெளிபடையாக சொன்ன உண்மை. டாட்