சென்னை: தமிழகத்தில் பெய்த பெருமழை, பல முன்னணி நடிகர்களின் வேஷங்களை கலைத்துவிட்டது. அதேநேரம், யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த பல சிறு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நெகிழ வைத்துவிட்டனர். பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். ஆனால் தமிழ் திரையுலகில் பெருமளவுக்கு சோபிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில்தான் மக்கள் இவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்தனர். எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றுபவர் பாலாஜி. சமீபகாலத்தில் சில படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா சமீபகாலத்தில் மறந்துவிட்ட காமெடி கலைஞன் மயில்சாமி. ஒரு காலத்தில் இளம் பெண்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர் நடிகர் மோகன். குண்டக்க மண்டக்கததான் பேசுவார், வேறு எதுவும் உருப்படியாக தெரியாது என்று மட்டுமே நினைத்திருந்த பார்த்தீபன் போன்ற நடிகர்கள் இன்று நிஜ உலகின் டாப் ஹீரோக்களாக ஜொலிக்கிறார்கள்.
மழை நேரத்தில் சென்னையில் இவர்கள் ஆற்றிய பணிகள் அத்தனை மகத்துவமானது. இப்போதுதான், திரையுலகில் எட்டிப்பார்க்கும் இமாம் அண்ணாச்சிகூட, முட்டிக்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று கோயம்பேடு பகுதியில் உணவு பொருட்களை வழங்கி வந்துள்ளார். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளதாக மார் தட்டும், நடிகர்கள் என்ன செய்தார்கள்?
இந்த முன்னணி நடிகர்களுக்குத்தான் எத்தனை ரசிகர் மன்றங்கள், எத்தனை பாலாபிஷேங்கள், எத்தனை கட்-அவுட்டுகள். அத்தனையும் செய்ய ஆளிருந்தும், முன்னின்று கட்டளை மட்டுமாவது இடுவதற்கும் அந்த நட்சத்திரங்களுக்கு மனதில்லை. ஒரு சில நடிகர்கள் திரைமறைவில் உதவிகளை முடுக்கிவிடுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இது என்ன கஞ்சா வளர்க்கும் தோட்டமா, யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க? செய்யும் உதவியை, (ஒருவேளை செய்தால்) வெளிப்படையாக செய்தால், எத்தனையோ ரசிகர்களுக்கு அது ஊக்கம் அளித்திருக்கும். ஆனால் நடக்கவில்லை.
கோடிக்கணக்கான ரசிகர்கள் வைத்துள்ளதாக கூறி, பெருமை பீற்றிக்கொள்ளும் இளம் உச்ச நட்சத்திரங்கள் இதுவரை நிவாரண நிதி எதையும் அறிவிக்கவில்லை. கமல் ரூ.15 லட்சமும், ரஜினி ரூ.10 லட்சமும் அறிவித்துள்ளனர். சூர்யா, விஷால் போன்றோரும் நிதி கொடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் சதா காலமும் எங்க நடிகர்தான் பெரிய ஆள் என சண்டை போடுவோர் இப்போது அந்த நடிகர்களை எங்கே என ஹேஷ்டேக் போட்டு தேடும் நிலையில்தான் உள்ளனர்.
அதேநேரம், தெலுங்கு நடிகர்கள் எவ்வளவே பரவாயில்லை. அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிலோ, முன்னணி நடிகர்களுக்கு கிள்ளிக்கொடுக்க கூட கை நடுங்குகிறது.
ஒரு புதுப்படம் அறிவிப்பு வந்தாலே ஊருக்கு ஆயிரம் கட்-அவுட் வைத்து, மாஸ் காட்டும் ரசிகர்களை, அந்த பணத்தை நிவாரணப் பணிக்கு கொடுங்கள் என வாய் திறந்து கூற ஸ்டார்களுக்கு மனதுவரவில்லை. வெள்ளத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க மனமில்லாத இந்த ஸ்டார்கள் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை என்னவென்று சொல்வது?
“தமிழால் உயர வேண்டும் தமிழனாய் நற்ப்பெயர் எடுக்க வேண்டும் ” நல்ல செய்தியை செம்பருத்திக்கு தேடி பிடிச்சி எடுத்து இருக்கேன் ,இது உங்கள் கண்ணுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் ,அதனால் தான் நான் உங்களுக்கு உதவி செய்தேன் போங்கள்,,,,,
……………………………………..தேர்தல், காவிரி, ஈழத் தமிழர், வெள்ளச் சேதம் என ஊரில் என்ன நடந்ததாலும் முதலில் உருளும் தலை ரஜினியுடையது என்றாகிவிட்டது.
அவர் தலையை உருட்டப்படுவதில் முக்கியப் பங்கு ஊடகங்களுக்குத்தான். ரஜினி குறித்து அரைகுறையாக எதையாவது செய்தித்தாள்களும், இணையதளங்களும் எழுதிவிட்டுப் போக, அவற்றை திடீர் செய்தியாளர்களாகிவிட்ட பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப்வாசிகள் சரமாரியாகப் பகிர்ந்து பிரபலப்படுத்துகின்றனர்.
இவை உண்மையா பொய்யா என்று கூட குறைந்தபட்சம் யாரும் விசாரிப்பதில்லை. அப்படியே நம்பி மீண்டும் செய்தியாக வெளியிட்டுவிடுகின்றனர்.
தமிழக வெள்ள நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் ரூ 10 கோடி கொடுத்ததாக ஊடகங்களிலும் முன்னணி பத்திரிகைகளிலும் செய்திகள் வலம் வந்து கொண்டிருப்பது இப்படித்தான்.
உண்மையில் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார் ரஜினி?
கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெள்ள நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்தை, சென்னையை பெரும் மழை தாக்கியதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு வெள்ளம் தாக்கிய பிறகு, கடந்த ஐந்து தினங்களாக நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறார்.
ராகவேந்திரா மண்டபத்திலும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்திலும் வைத்து இந்த நிவாரணப் பொருள்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் மதிப்பு ரூ 5 – 6 கோடி வரை இருக்கும் என்று ரசிகர் மன்ற நிர்வாகி தெவித்தார்.
இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய உதவி. தங்களால் முடிந்த ஒரு தொகையைத் தந்துவிட்டு பலரும் ஒதுங்கிக் கொள்ள, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அமைதியாக பெரும் நிவாரணப் பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி இன்னும் கூட முடியவில்லை.
ரஜினி மன்றப் பொறுப்பாளர் சுதாகர், ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் போன்றவர்கள் இப்போது நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த மழை வெள்ள பாதிப்பில், தமிழ் திரையுலகைப் பொருத்தவரை ரஜினிதான் மிகப் பெரிய அளவுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கியிருக்கிறார்.
ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் அளித்துள்ளார். ஆனால் நேரடியாக மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சேர வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய அளவில் பொருளுதவி செய்துள்ளார்.
இதை தானே களமிறங்கி செய்தால் அது பெரும் பரபரப்பைக் கிளப்பும். நிவாரண உதவி வழங்குவது ஒரு சேவையாக இல்லாமல், பிரமாண்ட அரசியலாகிவிடும்… ஆட்சியாளர்களுக்கும் சங்கடம் ஏற்படும் என்ற உண்மை புரிந்ததால், விளம்பரமின்றி செய்து வருவதாக ரஜினிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
ரஜினி ஒரு விஷயத்தைச் செய்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கும்!
–தமிழ்சினிமாலைவ்
தமிழனாகிய தமிழ் கதை ஆசிரியருக்கு ரஜினி செய்த மாபெரும் உதவி !!..படிங்கப்பா நல்ல விசியங்களை படியுங்க …………………………………………………….ரஜினி, தொடக்கத்தில் வில்லனாக நடித்தார். அப்புறம் இரண்டு, மூன்று கதாநாயர்களுள் ஒருவராக நடித்தார். “ப்ரியா”, “ “நினைத்தாலே இனிக்கும்”, “ஆடு புலி ஆட்டம்”, “சங்கர் சலீம் சைமன்”, “இளமை ஊஞ்சலாடுகிறது” வரை இந்த ரகம்.
தயாரிப்பாளர் கலைஞானம், “பைரவி” என்றொரு படம் எடுக்க முன்வந்தார். இந்த கலைஞானம் ஒரு கதாசிரியர்தான். இருந்தாலும் சண்முகம் என்பவர், இவரது கதையை வாங்கிப் படமாக்க முன்வந்தார். அதனால் இந்த சண்முகத்திற்கு பின்னாளில் “பைரவி” சண்முகம் என்றே பெயராயிற்று.
ஆனால், கதாநாயகநாக நடிக்க ரஜினி உடனே ஒப்புக்கொள்ளவில்லை. “வில்லனாக நடித்து வருகிறேன். “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில்கூட எனக்கு கதநாயகனுக்கு எதிரான வேடம்தான். என்னை ஹீரோவாகப்போட்டு படம் எடுப்பது ரிஸ்க் அல்லவா?” என்றாராம் ரஜினி.
கதை சொல்லப்போன சண்முகம், “கதையைக் கேளுங்கள். பிடித்திருந்தால் அப்புறம் பேசுவோம்” என்றாராம்.
கதையாக்கேட்ட ரஜினி, ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். அப்போது சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், கமல்ஹாசன் போன்றவர்களே ஹீரோக்களாக நடித்துவந்தார்கள்.
“பைரவி” தொடங்கி, முடித்து, வெளியிடப்பட்டது. ரஜினி பயந்தது போல் இல்லாமல், படம் வெற்றி பெற்றது. “ஓகோ” என்ற வெற்றி இல்லையானாலும் மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான வெற்றி.
இதன் பிறகு ரஜினி தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார். ஏவி.எம்.மின் “முரட்டுக்காளை” படம், இவரை “பாப்புலர் ஹீரோ” ஆக்கியது.
இதற்கிடையில் ஏவி.எம்மில் பணிபுரிந்துவந்த “பைரவி” சண்முகம், தனியே ஒரு படம் டைரக்ட் செய்ய சென்றார். அன்தப்படம் பாதியோடு நின்றுபோய்விட்டது.
“பைரவி” படத்தின் கதையில் கதாநாயகன் ஊனமுற்றவராக இருப்பார். ரஜினி, தாம் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே இப்படி நடிக்க விரும்புவாரா? மாட்டார். . அதனால், “ரஜினியிடம் எப்படியாவது பேசி, கதையை ஏற்கச் செய்வது உன் வேலை” என்று கூறித்தான் சண்முகத்தை ரஜினியிடம் பைரவி கதையைச் சொல்ல அனுப்பினார்கள்.
எதிர்பார்த்தது போலவே, ஊனமுற்ற ஹீரோவாக நடிக்க முதலில் ரஜினி மறுத்துவிட்டார். வேறு கதை தயார் செய்யச் சொன்னார். சண்முகம்தான் ரஜினியை “காம்ப்ரமைஸ்” செய்து ஒருவாறு சம்மதிக்க வைத்து, நடிக்க வைத்துவிட்டார்.
அதிலிருந்து ரஜினிக்கு ஏறுமுகம்தான். ஆனால் சண்முகம்தான், பாவம். ஏவி.எம்.மில் பார்த்த வேலையும் இல்லாமல், தனியாக வந்து இயக்கிய படமும் பாதியில் நின்று.. சிரமத்தில் இருந்தார்.
இப்போது இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. ரஜினி பெரிய ஹீரோ. அவர் எவெரஸ்ட் சிகரமாக, தான் கைபர் கணவாயாக, அவர் பைரவியாக.. தான் பாதாள பைரவியாக, மலையும் மடுவுமாக இருக்கும் நிலையில், இப்போது போய் ரஜினியை சந்தித்தால் மதிப்பாரா? அல்லது தன்னை நினைவுதான் வைத்திருப்பாரா?
”உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது.. அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது” என்று “சூரியகாந்தி”படத்தில் கண்ணதாசன் பாடியது அடிக்கடி சண்முகத்தின் காதில் ரீங்காரமிட.. ரஜினியை சந்திப்பதை தவிர்த்துவந்தார்.
இந்நிலையில் சண்முகத்தின் மகளுக்கு திருமண ஏற்பாடுவேறு நடந்தது.. வாழ்ந்துவந்த வீடு அடமானத்தில் இருந்தது. அதுவும் இப்போது வட்டி வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. “சேட்டு” அனுப்பிவிட்டான் சீட்டு!
என்ன செய்வது..? “காகித ஓடம்.. கடலலை மீது போவது போலே” வடபழி தெருக்களஇல் போய் வந்துகொண்டிருந்தார் சண்முகம். வாழ்க்கையின் ஓரத்தையே நெருங்கிவரும் நிலையில்.. சந்தித்தார் அவரது சகாவை!
ஏவி.எம். கதை இலாகாவில் பணியாற்றிய லட்சுமி நாராயணன்தான் அந்த சகா. அவர் சண்முகத்திடம், “ரஜினியை சென்று பாரேன்.. உதவுவார்” என்றார்.
“ரஜினி அப்போதிருந்த நிலையில் இப்போது இல்லை. உயரத்திற்குப்போய்விட்டார். நானும் அப்போது இருந்த நிலையில் இப்போது இல்லை. அதள பாதாளத்தில் விழுந்துவிட்டேன். ரஜினியிடம் போய் என்ன கேட்பது? எதைக் கேட்பது? என்ன உரிமையில் கேட்பது? “பைரவி” படத்தில் நான் கதாசிரியன். அவர் ஹீரோ. மற்றபடி அவருக்கும் எனக்கும் ஒட்டும் இல்லை: உறவும் இல்லை… அதான் யோசிக்கிறேன்!”
“யோசித்தால் தயக்கம்தான் ஏற்படும்! போ! ரஜினியைப் பார்! உன் நிலமையைச் சொல். அதில் உண்மை இருக்கிறது அல்லவா? அது போதும். மற்றதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும். நல்ல மாதிரி அவர் முடிவு செய்வதும் செய்யாயததும் அவரது மனம், உனது நல்ல நேரம் – இரண்டையும் பொறுத்தது. போய் ரஜினியை உடனே பார்!” என்றார். லட்சுமி நாராயணன்.
மறுநாள் ரஜினிக்கு போன் செய்தார் சண்முகம். உதவியாளர் ரமேஷ் எடுத்தார். “பைரவி சண்முகம் என்று சொல்லுங்கள்!” என்று சண்முகம் சொன்னார்.
மறுமுனையில் ரஜினியே வந்தார்: நலம் விசாரித்தார்.
“தங்களை சந்திக்க வேண்டும்” என்றார் சண்முகம்.
“நாளைக்கு காலை பத்து மணிக்கு வாருங்கள்” என்றார் ரஜினி.
மறுநாள்.. பரபரப்புடன் சென்றார் சண்முகம். ரஜினியை சந்திக்க வந்திருந்த தயாரிப்பாளர், இயக்குநர், இன்ன பிறர் வரவேற்பறையில் காத்திருந்தனர்.
அங்கு சென்ற சண்முகம், தனது பெயரையும் ஒரு காகிதத்தில் எழுதி அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்தார். தனது முழுப்பெயரான சண்முக சுந்தரம் என்பதை எழுதியிருந்தார். காத்திருந்தார்.
நேரமாயிற்று. இவருக்கு முன் அங்கே காத்திருந்தவர்களையும் ரஜினி உள்ளே அழைக்கவில்லை. சண்முகத்தையும் அழைக்கவில்லை.
நேரமாகிக்கொண்டே இருந்தது. மணி பத்து முப்பது.
ரஜினி, உதவியாளரை உள்ளே கூப்பிட்டார். சற்று நேரத்தில் வெளியே வந்த உதவியாளர், “பைரவி சண்முகம் என்பவர் வந்திருக்கிறாரா..?” என்று கேட்டார்.
“நான்தான்!” என்றார் சண்முகம்.
“என்ன சார்.. உங்கள் பெயரை பைரவி சண்முகம் என்று சொல்லக்கூடாதா? சார் உங்களுக்காகத்தான் ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறார். வாருங்கள்..” என்றார்.
சண்முகம் போனார்.
ரஜினி எழுந்து, அவரைக் கட்டி அணைத்துக்கொண்டார். பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்துகொண்டார்.
“இத்தனை காலம் ஏன் என்னை சந்திக்க வரவில்லை?” என்று கேட்டார்.
சண்முகம், தான் டைரக்டரான கதையை எல்லாம் சொன்னார். தொழில் தேக்கம், வறுமை, மகள் திருமணம், வீடு ஏலம்.. எல்லாவற்றையுமே சொன்னார்.
கேட்டுக்காண்டார் ரஜினி.
அப்போது ரஜினியினஅ மனைவி லதாரஜினி அங்கே வந்தார்.
“பைரவி” சண்முகத்தைப் பார்த்ததும், ரஜினியிடம் “நீங்கள் சொன்னது இவர்தானா?” என்றார்.
லதா – ரஜினி
லதா – ரஜினி
பஞ்சக் கோலத்தில் இருந்த “பைரவி” சண்முகத்திற்கு ஆச்சரியம். தாம் வருவதற்கு முன்பே தம்மைப்பற்றி மனைவியிடம் கூறியிருக்கிறார் ரஜினி!
“கொடு!” என்று ரஜினி மனைவியைப் பார்த்துக்கூற, லதா தன் கையில் இருந்த பணப்பையை ரஜினியிடம் கொடுத்தார். அதில் இருந்தது ஒரு லட்ச ரூபாய்!
ஆக, சண்முகம் தனது கஷ்டத்தைச் சொல்வதற்கு முன்பே, ரஜனி தன் மனைவியிடம் கூறி வரப்போகிற சண்முகத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவ ஏற்பாடு செய்துவிட்டார். இது தெரியாமல் சண்முகம் தனது கஷ்டத்தை விளக்கிச் சொல்லியிருக்கிறார் ரஜினியிடம்!
ரஜினி எழுந்தார்.
சண்முகத்தை கிழக்கு நோக்கி நிற்கச்சொன்னார்.
அவர் கையில் பணப்பையை கொடுத்தார். அதில் இருக்கும் தொகையையும் சொன்னார்.
பிறகு, “லதா! இவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கொள்வோம்!” என்றபடிசண்முகம் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ண, லதாவும் உடன் நமஸ்காரம் செய்துகொண்டார்.
உடனே பெரிய அழுகைச் சத்தம்!
அழுதவர் சண்முகமேதான்.
அழுகையோடு ரஜினியைக் கட்டித் தழுவிக்கொண்டார்!
சண்முகத்தை சமாதானப்படுத்தி, அவர் அழுகையை நிறுத்தச் செய்வதற்குள் ரஜினிக்கு பெரும்பாடாகிவிட்டது.
அதைப் பார்த்த லதாவுக்கு அது ஒரு தேவ தரிசனமாகத் தெரிந்திருக்க வேண்டும்!
லதாவிடம், “இன்றைக்கு நான் ஹீரோவாக இருப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். இவரது கைவாகு, கதை ராசி… பெரிய ஆள் ஆகிவிட்டேன்!” என்றார் ரஜினி உணர்ச்சி மேலிட!
– See more at: http://www.rajinifans.com/detailview.php?title=1558#sthash.IrskXwo1.dpuf
நடிகன் என்பவன் யார் ? 1)நடிக்கத் தெரியாதவன இயக்குனர் செல்லிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிப்பவன் 2)எழுதி கொடுக்கும் வசனத்தை மனப்பாடம் செய்து பேசுபவன் 3)சண்டை தெரியாதவன் இவனுக்காக பிறர் டூப் போட்டு அடி வாங்குவார் . 4)பாடவும் ,ஆடவும் தெரியாதவன் .பின்னனி இன்னொருத்தன் இப்படி ஒன்றுமே தெரியாத அறியாத நடிகன் மக்கள் மத்தியில் ஈரோ ஆகிறான் .அல்லது ஆக்கப்படுகிறான் .வயிற்றுப் பிழைப்புக்கு சினிமாவில் தொழில் செய்யும் நடிகர்களின் பின்னால் பைத்தியம் பிடித்து ஓடும் ஓட்டம் நிழலைத துரத்துகிறது நிழலை நம்புகிறவர்களின் மனது போலித்தனத்தில் சிக்கி தவிக்கிறது இந்த்த தவிப்பை ரஜினியிடம் கொட்டிய மக்களிடம் காண முடிந்தது சினிமாக்காரனை தலைவா என்று அழைப்பதும் அவன் காலியில் விழுவதும் அவனை மோகிப்பதும் நம் இனம் மட்டும்மல்ல அனைவரிடமும் இருக்கும் நோய் .
நல்ல கருத்து மீன லோஷினி.
சினிமாவின் மூலம் நாம் அடைந்த நமைகள் என்ன 1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம் பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா (2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா (3)திருட்டின் வகைகளை கற்று கொடுத்தது இந்த சினிமா (4)நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா (5)இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா (6)வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா (7)காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சி மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா (8)தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா (9)பேஷன் என்ற பெயரில் பெண்களை அரை குறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம் ,பண்பாடுகளை அளித்தது இந்த சினிமா (10)ஆபாசத்திற்கு பொழுது போக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா (11)உறவுகளின் புனிதத்தன்மையாய் பாழ்படுத்தியது இந்த சினிமா (12)உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா (13)திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது இந்த சினிமா (14)”அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே “என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் “விபச்சாரம் “செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா (15) வியாபார நோக்கத்திற்காக சமூகஒற்றுமையை சீர் குலைத்ததுஇந்த சினிமா ஒழுக்கக் கேட்டைத் தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை மொத்தத்தில் சினிமா என்பது ஒழுக்கச் சீர் கேட்டின் ” கையேடு ” விபச்சாரத்தின் ” நுழைவாயில் ” சமூக சீர் குலைவிற்க்கான “ஆயுதம்” சினிமாவை வெறுக்க வேண்டுகிறேன் …………!
நன்றி திரு தேனீ அவர்களே வசைப்படவும் ஒருகூட்டம் இருக்கும் !
மட்டுமா ? இப்போதைய சினிமாவில் தகப்பனை வாடா ..என்றும் தாயை வாடி என்றும் சொல்வது மாத்திரம் அல்ல ..பெற்றோரை பிள்ளைகள் அடிக்கும் காட்சிகளும் சாதாரணம் ..ஆக தகர தமிழகம் உருப்பட மாதிரி தான் ..கேவலம் சுத்தம் என்றால் என்ன …ஒழுங்கு என்றால் என்ன என்று மக்களை படிப்பிக்க வேண்டிய பொதுஜன ஊடகங்கள் …புகைத்தல் ..குடித்தால் இவைகளை பரப்புகின்றன …சமீப வெள்ளத்தில் நீர் தேங்கியது ..தகர தமிழக பிறவிகள் குப்பைகளை சாக்கடிக்குள் எறிந்து நீர் போவதை அடைத்ததுதான் …இவர்களை கடவுள் கூட திருத்த முடியாது வாழ்க அடுத்த முதல்வர் கன்னட வழுக்கை குரங்கு சேஷ்டை நடிகன்
meena lozeni,நல்ல ஆய்வின் கருத்து…நன்றி!
இது திராவிட இலக்கு நல்ல திரைப்படங்கள் அந்நாளில் திரையிடபட்டது.நடப்பதை அப்படியே கண்முன் திரையிட்டு காட்டிவிட்டீர் நன்றி.
இதுவெல்லாம் எவ்வளவு சொன்னாலும் திருந்தாது.முதலில் திராவிடர் சாயத்தை விலக்குதல் வேண்டும்,வகுக்கபட்ட விதிப்படி வாழ்ந்தாலே இலக்கை அடையமுடியும்.அன்று திராவிட கிழம் நிகழ்த்திய அந்தணர் அழிப்பு கொள்கை வுல்லவர் அனைவரும் திராவிடனே,அதையே இன்று செம்பருத்தியில் வாதிட்டு வருகின்றனர்.ஞான கண்களை திறக்க மறுக்கின்றனர்.தமிழர் தமிழர் என்று பிரித்து விரண்டாவாதம் கொள்கை விட்டு நாம் அனைவரும் ஹிந்து என்று மாறுகிறதோ அன்றே நாம் பலம் பெற்றவர் ஆகிடுவோம் நீங்கள் சொன்ன அணைத்து குற்றமும் மறைந்துவிடும்.சைதான் வுள்ளே வரமுடியாது,வரகூடாது அதற்க்கு அனைவரும் வுழைக்க வேண்டும்,நமஸ்காரம்
வாழ்க நாராயண நாமம்.
காய் உனக்கு உதய் காத்திருக்கிறது
நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் பாலா செய்தியார்களிடம் கூ றியதாவது : கேள்வி :தேசிய விருது பெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்கள ? பதில் : நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார் ?கடவுளா வந்து மேக்கப் போட்டார் ?கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார் ? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார் ?கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர் ,நடிகைகள் , கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள் ,இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும் “உலகை இயக்கும்இயக்குனர் கருணை இல்லாவிட்டால் இந்த போலி இயக்குனரால் அணுவையும் அசைக்க முடியாது ?
தமிழன் யாம் பயந்துவிட்டோம்,சும்மா காமடி பண்ணாதீங்க தமிழன்.எனக்கு சிரிப்பா வருது வோய்,எப்போ2 சொல்லும் யிவனயெல்லாம்….
நாராயண நாராயண.
மீன லோசினி, காலத்துக் கேற்ற விளக்கம்!! சினிமாவை ஒரு பொழுது போக்காக கொண்டால் நலம்!! என்ன செய்வது? இக்காலத்திலும், தமிழ்ப் பள்ளியை முன்னுயர்த்த இதே சினிமா கூத்தாடிகளைத்தானே நம்பி இருக்கிறார்கள் நம்மில் ஒரு சிலர்!! சினிமா கூத்தாடிகள் என்ன இலவசமாகவா தமிழ்ப் பள்ளிக்கு உதவுகிறார்கள்??? ஏன்! விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமே?? விருந்து நிகழ்ச்சி ஒன்றினை செய்து, தமிழ்ப் பள்ளி ஒன்றுக்கு பெருந்தொகையை அளித்து உதவியுள்ளோம்!! இதேபோல், நல்ல நிகழ்ச்சிகைக் கொண்டு தமிழ்ப் பள்ளிக்கு உதவலாமே!! சிந்திப்போம் செயல் படுவோம்!!!