நடிகர் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய கோவை பொலிசார் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைத்து, நடிகர் சிம்பு எழுதி பாடியதாக இணையதளத்தில் ஒரு பாடல் வேகமாக பரவி வருகிறது.
இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், கோவையில் மாதர் சங்கத்தினர், பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றியதாக சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பாக புகாரினை அளித்துள்ளனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய கோவை பொலிசார் சென்னைக்கு வந்துள்ளனர்.
இன்று சிம்புவை பொலிசார் கைது செய்வார்கள் என்றும் வெளிநாட்டில் உள்ள அனிருத் திரும்பி வந்ததும் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
-http://www.newindianews.com
இது உண்மை என்றால் …மிகவும் மகிழ்ச்சி …அதைவிட மகிழ்ச்சி இந்த அஞ்சடிகளை பல வருடங்கள் சிறையில் வைப்பது…..இந்த அஞ்சடிகளின் படங்களையும் இசையும் இனி யாரும் காணாதீர் / கேட்காதீர்.
சென்னை விரைந்த கோவை போலிசார் முதலில் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு இந்தப் பாடலில் அம்மாவுக்குப் பாதகமாக ஏதாவது இருக்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகு, அம்மா “இல்லை! இது தமிழ் நாட்டுப் பெண்களுக்குத்தான் கேவலத்தை உண்டாக்குகிறது! எனக்கில்லை” என்று தனது பதிலைக் கொடுத்த பிறகு தான் போலிசார் நடவடிக்கை எடுப்பார்கள்! அது வரை இல்லை!
உத்தி கொடுத்த அம்மா என்று பாடுன கோவணனை தேச நிபந்தனை சட்டத்தில் கைது செய்தார்கள், மொத்த பெண்வர்கத்தையும் இவ்வளவு கீல் தனமா பாடுன இவன்களை இது வரைக்கும் கைது செய்ய வில்லை எந்த ஒரு பெண்கள் அமைப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை… தமிழா நீ குடியில் மூல்கிவிட்டாய்.