பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது.
அதில் சிம்பு, ’’முதல்ல நான் ஒன்னு கேட்கிறேன். இந்தப் பாடல் எந்த டிவி சேனல், ரேடியோவிலாவது இந்தப் பாடல் ப்ளே ஆகுதா? அப்புறம் ஏன் என்னைக் கேள்வி கேட்கறீங்கன்னு எனக்குப் புரியலை. இது என்னுடைய பாட்டு. இது தொடர்பான எல்லாவற்றையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். இதில் அனிருத்தை கொண்டு வர வேண்டாம். தமிழ் சினிமாவிலேயோ அல்லது நான் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணி இந்தப் பாடலை வெளியிட்டு இருந்தாலோ நீங்கள் இதைப் பற்றி கேள்வி கேட்கலாம். ஆனா இது எதையுமே நான் செய்யலை.
எவண்டி உன்னைப் பெத்தான் தமிழ் சினிமாவைப் பத்தி எல்லோருக்கும் தெரியும் எவண்டி உன்னப் பெத்தான் கையில கிடைச்சான் செத்தான்னு நான் எழுதினேனே தவிர எவடி உன்னைப் பெத்தான்னு நான் கேட்கல. ஒரு விஷயத்தை பப்ளிக் பிளாட்பாரம்ல எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எனக்கு நல்லா தெரியும். தெரியாம வளர்ந்த பையன் நான் கிடையாது.
வெட்டு மாமா, அடிடா கொல்லுடா.. சரியா? இந்தப் பாடலை எல்லோரும் எதிர்க்கிறாங்க. ஆனா இதுல காமெடி என்னன்னா வெட்டு மாமா அவளை, அடிடா அவளை கொல்லுடா அவளை என்று பெண்களைத் திட்டித் தீர்க்கும் பாடல்கள் எல்லாமே இந்த தமிழ் சினிமாவில் வந்து இருக்கு. நான் பெண்களுக்கு ஆதரவாகத் தான் இந்தப் பாடல் வரிகளை எழுதி இருக்கிறேன். பொண்ணுங்களை நீ திட்டாத மாமா உன்ன நீயே திட்டிக்க மாமா உன் காதல் தோல்விதான் உன் வாழ்க்கையோட வெற்றி. அப்படின்னு நான் பொண்ணுங்களுக்கு ஆதரவாத் தான் இந்தப் பாட்டையே எழுதினேன்.
அதிகாரப்பூர்வமாக இந்தப் பாடலை நான் ரிலீஸ் பண்ணலை. நான் சும்மா பண்ணி வச்சு வீட்டில வச்சிருந்ததை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. இணையதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் காரணமாக யாருடைய விவரங்களையும் இன்று எளிதாக எடுத்து விடும் நிலை உருவாகி இருக்கிறது. அனிருத்திற்கும் இந்தப் பாடலிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம். என்னுடைய கிரியேட்டிவிட்டி முழுதாக முடிவடையாத நிலையிலேயே வெளியாகி விட்டது. இதைப் போல என்னிடம் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன். ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதைப் பற்றி இங்கு எல்லோரும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் நான் அம்மா பத்தியோ, மனைவி பத்தியோ பாடின பாடல்களும் இங்கேதான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து அதிகமான கெட்ட வார்த்தைகள் தமிழில் தான் இருக்கிறது. இந்தப் பாடல் குழந்தைகளை கெடுத்து விடும் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதே இணையதளத்துல தான் ஆபாசமான வீடியோக்கள் இருக்கின்றது. அதனை குழந்தைகள் பார்த்து கெட்டுப்போக மாட்டார்களா? தம் அடிக்காதே, தண்ணி அடிக்காதே, பொண்ணுங்களை திட்டாதே என்று நான் பெண்களுக்கு ஆதரவாகத் தான் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இந்தப் பாடலின் மூலம் என்னுடைய இமேஜை எல்லா வகையிலும் கெடுத்து விட்டார்கள். இதற்கு மேல் என்ன இருக்கிறது கெடுக்க. இந்த வழக்கில் என்னைச் சுற்றி உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த வழக்கை பார்த்துக் கொள்கிறார்கள். தப்புப் பண்ணியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். நான் தப்பு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டு இருப்பேன். ஆனா நான் எந்தத் தப்பும் பண்ணலையே. இந்த வழக்கைப் பொறுத்தவரை இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது என்னுடைய பூர்வஜென்ம அதிர்ஷ்டம் என்று கூறலாம்.
27 பாடலாசிரியர்கள் 27 பாடலாசிரியர்கள் எனக்கு எதிராக அறிக்கை விட்டு இருக்கிறார்கள். ஆனா நான் வேணும்னே இதைப் பண்ணல. மேலும் பெண்களைப் பத்தி நானா எதுவும் சொல்லலை. நான் அவங்க கருத்தை மதிக்கிறேன் ஆனால் நான் அதிகாரப்பூர்வமாக இந்தப் பாடலை வெளியிடாமல் அவங்க கருத்தை சொல்வது தப்பு.
சில பேர் கூறுகிறார்கள் நான் பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறேன் என்று. மழை, வெள்ளத்தால் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு பாடலை நான் ரிலீஸ் பண்ணுவேனா?. பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏன் தமிழ்நாட்ல சிலம்பரசனை யாருக்கும் தெரியாதா? இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் பண்ணவில்லை என்று சொல்லியும் என் உருவப் பொம்மையை எரிக்கிறீங்க, எனக்கு எதிராப் போராட்டம் நடத்துறீங்க. நான் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறேன் என்னுடைய டாக்டர் சொல்றார் இந்த மாதிரி கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடினா இன்னும் சில வருடங்கள்ள எந்திரிச்சு நடக்கவே முடியாதுன்னு. ஆனா நான் மக்கள் சந்தோசத்துக்காக அதையும் பொருட்படுத்தாமல் நடனம் ஆடுகிறேன். 30 வருஷம் தமிழ் சினிமாவிற்காக கஷ்டப்பட்ட என்னை யாரோ சொல்கிறார்கள் என்று அந்தப் பாடலை கேட்காமல் கூட என்னை எதிர்க்கிறீர்கள்.
இப்போ இருக்கிற சூழ்நிலையில் ரேப் பண்ணுனவன் கூட வெளியில் வந்திடுறான். இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று கூறியும் என்னைக் கடுமையாக விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களால் நான் காயப்பட்டு விட்டேன். தமிழ் சினிமாவுல யாரும் எனக்கு சப்போர்ட் செய்யலை. என்கூட இருந்தவங்களே என்னை விட்டுப் போய்ட்டாங்க. ஆனா தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை நீங்க எப்படி வேணா எடுத்துக் கோங்க ஆனா இது இப்படித்தான் நடந்தது’’
-http://www.nakkheeran.in
எல்லாம் பப்ளிசிட்டி காக இப்படி .கொலைவெறி பாடல் ஆரம்பிச்சி இபோ இங்கே வந்து நிக்குது .சீனா கரன் சினிமா நம்பிய வாலரண் . இனிமேலாவது இந்திய சினிமாவே மட்டும் நம்பிக்கிட்டு இல்லாம தொழில் நிற்பதிலும் கவனம் செலுத்தவும் .
ஐயோ பாவம் செம்பருத்தி ,இந்த செய்தியை போட மறந்து விட்டார்கள் ,,ரஜினி ,,,அனிருத் சொந்தம் என்று தெரிந்து செய்த தவறுக்கு அவரை வீட்டு பக்கம் வராதே என்று சொல்லி விட்டார் ,தமிழ் பெண்களை இழிவாக படிய சிம்புவுக்கு இசை அமிததின் வலில் ரஜினிக்கு கோபம் வந்து நியாயமாக நடந்து கொண்டார் ,,இந்த செய்தியை நான் செம்பருத்திக்கு தேடி கொடுக்க விருப்பம் இல்லைதான் ,,இருந்தாலும் செம்பருத்திக்கு ரஜினியை பற்றி பெருமையான செய்திகளை போட்டு பழக்கம் அல்லவா ,,அதானால்தான் செம்பருத்திக்கு நான் உதவினேன் ,,ன்னன்ச்ரி செம்பருத்தி ,,,
ரஜினியாக இருப்பது ரொம்பவே கஷ்டம் என்பார்கள். காரணம் அவர் அமர்ந்திருக்கும் இடம் அப்படி. ரஜினி இப்படி ஒரு சிகரத்தில் இருக்கிறார்… அவரது நெருங்கிய உறவினர்களான நாம் செய்யும் எந்த செயலும் அவரைக் கடுமையாக, அதுவும் உடனடியாக பாதிக்குமே என்ற நினைப்பு அவரது உறவினர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பல தீவிர ரசிகர்களுக்கு ரஜினியின் குடும்பத்தார் செய்யும் பல செயல்களில் உடன்பாடு இருப்பதில்லை.
உதாரணம், தனுஷ், அவர் தந்தை கஸ்தூரிராஜா, இப்போது ரஜினியின் மைத்துனர் மகன் அனிருத். முதல் முதலில் அனிருத் கேவலப்பட்டது, தன்னைவிட பல வயது மூத்த நடிகை ஆன்ட்ரியாவின் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்த படங்களை வெளியிட்ட போதுதான்.
அப்போதே அனிருத்தை அழைத்து, ‘பெரிய அளவுக்கு வரவேண்டிய பையன் நீ… பாத்து நடந்துக்கோ’ என்று அட்வைஸ் பண்ணதாக செய்தி வெளியானது. அடுத்து ஒரு படுமோசமான ஆங்கிலப் பாட்டு ஒன்றை அவரே வெளியிட்டார்.
இந்த பீப் பாட்டை விட மோசமான ஆபாசப் பாட்டு அது. வார்த்தைக்கு வார்த்தை ‘Fu…g’ என்று ஒலித்த அந்தப் பாடலை வெளியிட்டதே அனிருத்தான். உடனடியாக போலீஸ் சம்மன் பறந்தது. ஓடோடி வந்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ரவி ராகவேந்தர். கமிஷனரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பையனை மீட்டு வந்தார்.
அன்றே அனிருத்தை அழைத்த ரஜினி, ‘நான் முன்பே சொல்லிவிட்டேன். நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கலாம். ஒழுக்கமாக நடந்து கொள்ளாவிட்டால் இப்போது கிடைத்துள்ள வாழ்க்கையே பாழாகிவிடும்’ என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
அதெல்லாம் இந்த பீப் பாய் காதில் ஏறவே இல்லை என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இந்த பீப் பாட்டு விவகாரம் பரபரப்பு கிளப்பிய போது ரஜினி சென்னையில்தான் இருந்தார். லைகா தயாரிக்கும் 2.ஓ படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றவர், பீப் விஷயம் கேள்விப்பட்டு கடும் கோபமடைந்ததாராம்.
அடுத்து தன் குடும்பத்தினருக்கு அவர் போட்ட உத்தரவு.. ‘எக்காரணம் கொண்டும் அனிருத்தை வீட்டுப் பக்கம் வரவிடாதீர்கள்’ என்பதுதான். இதை அனிருத் வீட்டுக்கும் சொல்லிவிட, அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்களாம்.
அடுத்து தன் மகள்களை அழைத்து, “அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிருங்கள். வேறு இசையமைப்பாளர்களை அமர்த்திக் கொள்ளுங்கள்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம். இதில் ரஜினி மருமகன் தனுஷுக்குதான் பெரும் சங்கடமாம்.
அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளாராம். மாமனார் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனிருத்தை மாற்றுவாரா… அல்லது பீப் பாயை கட்டிக் கொண்டு அழுவாரா.. பார்க்கலாம்!
ஐயோ ஐயோ மறந்துட்டேன் செம்பருத்தி ,அந்த ரஜினி தன ராகவேந்திரா மண்டபத்தை வெள்ளம் பாதிக்க பட்டவர்களை உதவ வந்தவர்களுக்கு திருந்து விட்டாராமே ,கேல்படவில்லையா ??? ,பருவாவில்லை அடுத்து அந்த செய்தியை நான் உங்களுக்கு கொடுத்து உதவுகிறேன்
தம்பி சிம்பு ! தமிழ் திரை உலகத்தில் தமிழன் பெயர் போடக்கூடாது என்று வடுகர்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் ஏன் இப்படி ஒரு பாடல் ? ஒழுக்கம் அவசியம் தம்பி ! தமிழகத்தில் தமிழ் திரை உலகம் , மின் ஊடகம் , தினசரி நாளிதழ் ,தொலை காட்சி யாவும் தமிழன் கையில் இல்லை ! உன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள் !
தமிழன் உலகத்தில் எந்த மூலையிலும் இருந்தாலும், படித்து எவ்வளவு உச்சிக்கு போனாலும் சரி அவன் கூதாடிக்கு அடிமையே! உலகத்தில் சினிமா பைத்தியம் அதிகம் பிடித்தவர்கள் இந்தியர்களே, கூதாடிக்கு கோயில் கட்டுவது அவன் படத்தை வைத்து கும்பிடுவது தமிழன் ரத்தத்தில் உரிபோனது,அதை கொம்பனாலும் மறுக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது, இதை இப்படி ஆணிதரமா கூரும் நானும் தமிழனே!
தறிகெட்ட தறுதலைகள் தறிகெட்டு ஆடினால் இப்படிதான்…? இதுல வெட்கமில்லாமல் விளக்கம் என்னடா வேண்டி கிடக்குது..?
விளக்கம் ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை. இது போன்று நூற்றுக்கணக்கான பாடல்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டாரிடமிருந்து விலகி இருக்கக்கூடாத இடத்தில் இருப்பதாக நினைக்க வேண்டியிருக்கிறது. அப்பனுக்கும் பயமில்லை. அம்மாவுக்கும் பயமில்லை. கடவுளுக்குப் பயப்படுபவன் இப்படி செய்ய மாட்டான். ஆமா, இந்த நேரத்தில போயி தமிழ் மக்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று ரொம்பவும் நம்பிக்கை வை! இத்தனை வருஷமா நம்பிக்கை வைத்தவர்கள் என்ன வேற ஊர் காரனா?
எல்லாரையும் கேட்ட வார்த்தையில் பாடுவான் ,நாளைக்கு வேற ஒரு நடிகன் பாடுவான் இப்படியே போனால் பெண்களுக்கு ஏது மரியாதை ??இவனுக்கு வக்காலத்து வாங்குரவனையும் செருப்பால அடிக்கோணும் இவன் அப்பனையும் செருப்பால அடிக்கோணும்
நிலா காயிது, நேரம் நல்ல நேரம் ! என்ற பாடலை பாலசுப்ரமணியம் ஜானகியும் பின்னணி பாட , கமலஹாசனுக்கு ஜோடியாக ஒரு பெண் நடிகை ஆட , கிணறு பின்னாடி இருவரும் ஜல்சா பண்ண காட்சியை ரசித்த, தரம் கெட்ட பன்னாடைகள், சிம்பு வெளியிடாத பாட்டுக்கு ஏன் இப்படி குறைபட்டுகொள்கிராகள் என்று புரியவில்லை !
ஒரு மண்ணாங்கட்டி விளக்கமும் தேவையில்லை
மன்னிப்பு கேள்
போதும்
!
ஒரு தரங்கேட்டவன்னால்தான் இம்மாதிரியான தரங்கெட்ட செயல்களை செய்யமுடியும்…..அதற்க்கு விளக்கம் வேறு…..
தமிழிலே எவ்வளவோ நல்ல வார்த்தைகள் உள்ளன..அவையெல்லாம் இந்த நாதாரிக்கு தெரியாதா?? கேட்ட வார்த்தைகள் மட்டும்தான் தெரியுமா ??? என்ன செய்வது வளர்ப்பு அப்படி !!!! எவண்டா சொன்னது தமிழில் மட்டும்தான் அதிகமான கேட்ட வார்த்தைகள் உள்ளது என்று? இந்த பொரிக்கி என்ன பன்மொழி புலவனோ ?