போராடுங்க நியாயமான காரணங்களுக்காக, கோரிக்கைகளுக்காக போராடுங்க…

தமிழ்    -கருத்துக்களம்-'s photo.

சில நாட்களாக என் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயத்தை முகநூல் நண்பர்களாகிய தங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்…

நமது தமிழின உறவுகள் உறுப்புகள் அறுக்கப்பட்டு,கொடூரமாக கொல்லப்பட்ட போது போராடாத மக்கள்…

நம் மீனவர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொலை செய்தபோது போராடாத மக்கள்…

அண்டை மாநிலங்களில் அணுமதிக்காத அணு மின் நிலையம்,மீத்தேன் போன்ற கொடிய திட்டங்களை நம் மண்ணில் செயல்பட எதிர்த்துப் போராடாத மக்கள்…

நமது உரிமைகளைக் கேட்டுப் போராடாத மக்கள்…

திட்டமிடாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு வேடிக்கைப் பார்த்த தமிழக அரசை எதிர்த்துப் போராடாத நம் மக்கள்…

சிம்புவின் பீப் பாடலை எதிர்த்து சமூக வலைத்தளங்களிலும்,வீதியிலும் நின்று போராடுவது ஏன்…

சிம்புவை தூக்கிலிடுங்களென்று சொல்கின்றவனெல்லாம் உத்தமானா?

அவர் தனிப்பட்ட முறையில் பாடிய பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர்..

ஈழத்தமிழர்களுக்கு ஆதராவாக லயோலா கல்லூரி மாணவர்களோடு உண்ணாவிரத போராட்டத்தில் முதல் ஆளாக கலந்து கொண்ட தமிழன் சிம்பு..

அவன் அவன் எவ்வளவோ தப்பு பண்ணிட்டு சாலியா இருக்கான்…ஒரு பாட்டுப் பாடியதற்காக கொந்தளிக்கின்ற நம் மக்கள், ஊழல் மலிந்த அரசையும்,அரசு அதிகாரிகளையும், எதிர்த்துப் போராடி அரசை திருத்த முயற்ச்சிக்கலாமே!

திரிசா இல்லண்ணா நயன்தாரா என்ற சினிமாவில் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள்..

அப்பொழுது எங்கே சென்றது இந்த மாதர் சங்கம்…அந்த பட இயக்குனரை செருப்பால அடிச்சிருக்க வேண்டாமா..

முறைப்படி திரையிடப்பட்ட இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அந்த கேவலமானா படத்தை எதிர்த்துப் போராடாத மாதர் சங்கம்…முறைப்படி வெளியிடாத, எவனோ ஒருவன் திருடி வெளியிட்ட நான்கு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய திருட்டுப்பாடலை திருட்டுத்தனமாக தேடிப் போய் கேட்டு அதை எதிர்த்து போராடுவதேன்??

போராட்டத்தினால் மட்டுமே நம் உரிமைகளை பெற முடியும்…போராடுங்க நியாயமான காரணங்களுக்காக,கோரிக்கைகளுக்காக போராடுங்க…

நான் எவனுக்கும் ரசிகனல்ல..

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்த சகோதரி திரு.வீரலட்சுமி அவர்களுக்கு நன்றிகள்..

-SL Pragash

https://www.facebook.com