பாதிக்கப்பட்டவராக கருத வேண்டிய சிம்புவை தீவிரவாதியை போல் தேடுவதா?

simbu_001செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு பல ஆயிரம் பேர் இறந்த விவகாரத்தை திசை திருப்பவே நடிகர் சிம்பு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மூத்த வழக்கறிஞர் இதுபற்றி கூறுகையில், சிம்பு மீது பதியப்பட்ட வழக்கு, விசாரணைக்கே உகந்தது இல்லை.

மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகார் கொடுத்தால் பல மாதங்களுக்குப் பிறகுதான், வழக்குப்பதிவு செய்யப்படும்.

ஆனால், சைபர் கிரைம் பொலிசார் புகார் பெற்ற அன்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற புகார்களை மகளிர் காவல்நிலையத்தில்தான் விசாரிக்க வேண்டும்.

ஏன் இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கூடிய வழக்கை சைபர் கிரைம் விசாரிக்க வேண்டும்?

அவர் பாடிய பாடல் பற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. அதற்காக தீவிரவாதியை தேடுவதுபோல பொலிசாரின் நடவடிக்கைகள் அமைவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரிவுகளின் படி உடனடியாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியமோ, பாஸ்போர்ட்டை முடக்க வேண்டிய தேவையோ இல்லை.

சர்ச்சைக்குரிய பாடலை தான் இணையதளத்தில் வெளியிடவில்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

எனவே, திருடி வெளியிட்ட நபர்தான் இதில் கைது செய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டது சிம்புதான். அவரது தந்தைதான் புகார் கொடுத்துள்ளார்.

அதனால், அந்த புகார் மீதுதான் வழக்குப்பதிவு செய்து பாடலை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் சட்டப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்வது, அவரை தேடுவதாக அறிவிப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டு பல ஆயிரம் பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த விவகாரத்தை திசை திருப்பவே, தமிழக அரசும், உளவுத்துறையும், சென்னை பொலிசாரும் இணைந்து இந்த விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளதாக சந்தேகப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com