சென்னை: இசைஞானி இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையுடன் கூடிய தாரை தப்பட்டையின் பாடல்களும், தீம் இசையும் ஊரெங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ள நிலையில் அவரது 1001வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாரை தப்பட்டை. வரலட்சுமிதான் நாயகி. இப்படத்திற்கு இசை இளையராஜா. இது அவருக்கு 1000மாவது படம். இப்படத்தின் இசை சமீபத்தில்தான் வெளியானது. வெளியான வேகத்திலேயே ஹிட் ஆகி விட்டன பாடல்களும்ம், தீம் இசையும்.
ஊரெங்கும் இளையராஜாவின் 1000மாவது பட இசை ஹிட்டாகியுள்ள நிலையில் அவரது 1001வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படம் முத்துராமலிங்கம். இதுதான் இளையராஜாவின் 1001வது படமாகும்.
கெளதம் கார்த்திக் கடல் படத்தில் நடிக்க வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மணிரத்தினத்தின் நேரமோ அல்லது கெளதமின் நேரமோ தெரியவில்லை, அவர் இதுவரை எடுபடாமலேயே இருக்கிறார்.
இந்த நிலையில்தான் புதிதாதக முத்துராமலிங்கம் படத்தில் நடிக்கப் போகிறார் கெளதம். ராஜதுரை இப்படத்தை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
முத்துராமலிங்கம் என்ற பெயருக்கும், கெளதம் கார்த்திக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அவரது தாத்தா பெயர் முத்துராமன் என்பதே அந்த தொடர்பு.
கடைசியாக கெளதம் கார்த்திக் நடித்த படம் வை ராஜா வை. தற்போது அவர் ரங்கூன், இந்திரஜித் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். முத்துராமன்.. மகன் கார்த்திக்குக்கு உயர்வு கொடுத்தார்.. அதேபோல பேரன் கெளதமையும் கரையேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

























