டிரைலரிலேயே சாதனை படைத்த சிம்பு

டிரைலரிலேயே சாதனை படைத்த சிம்பு - Cineulagam

2016 புத்தாண்டிற்கு வெளியான அச்சம் என்பது மடமையடா ட்ரைலர் மூன்று நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது, சிம்புவின் ரசிகர் பலத்தை மீண்டும் திரைஉலகிற்கு பறைசாற்றியது.

இப்போது டிரைலர் வெளியாகி 8 நாளில் 2 மில்லியன் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். டிரைலரில் வரும் “தள்ளி போகாதே” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த முழு பாடல் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.cineulagam.com