உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே!

Kumarathasan Kumarasamy's photo.

உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ என்ற இணையதளம், இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடல் இயற்றும் தன்மை, பாடகராகவே உருவாகிய விதம், இசைக்கருவிகள் கையாளும் வல்லமையென எல்லாதுறைகளிலும் இளையராஜாவின் பெரும்பங்கை சுட்டிக்காட்டிருக்கின்றது. சக தமிழனாக, இசைரசிகனாக இசைஞானி இளையராஜாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரின் சமகாலத்தில் வாழும் மனிதன் என்பதும் கூடுதல் சிறப்பே.

வாழ்த்துகள் ராஜா சார்!

Kumarathasan Kumarasamy-www.facebook.com