நலிந்த நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என, நடிகை கோவை சரளா கூறினார்.
இதுகுறித்து நடிகை கோவை சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொடங்கப்பட்ட குருதட்சணை திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களும் நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இதில், நாடக நடிகர்களின் நடிப்புத் திறனையும் பதிவு செய்கிறோம். இவை, கணினியில் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவை இயக்குநர்களுக்கு வழங்க உள்ளோம். இதன் மூலம், கதாபாத்திரங்களுக்குத் தேவையான நாடக நடிகர்களைத் தெரிவு செய்து சினிமாவில் நடிக்கவைக்க முடியும். நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
-http://www.dinamani.com
ஏட்டளவில் இல்லாமல் செயல் அளவிலும் இது வர வேண்டும். வரும் என நம்புகிறேன். வாழ்த்துகள்!
இந்த மாதிரி தந்திரமா எதையாவது ஆரம்பிச்சு தமிழனை ஓரங்கட்ட திட்டன் போட்ட…உனக்கு சங்குதான்!!!
நீ நடிக்கும் போது வாய்ப்பு கொடுத்தியா?
அப்பெல்லாம் நாடக நடிகரை கண்ணுக்கு தெரியலையா ?