தமிழ்த் திரையுலகத்தில் வாரிசு நடிகர், நடிகைகளுக்குப் பஞ்சமேயில்லை. பல முன்னாள், இந்நாள் நாயகன், நாயகிகள் வாரிசுகள் பலரும் திரையுலகத்தில் நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ, இயக்குனர்களாகவோ இருந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார்கள், பலர் பின்னணியில்தான் இருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் அவர்களைத் தேடி வராததால் அவர்களில் திறமையுள்ள பலரும் இன்னும் பெயர் வாங்காமலே இருக்கிறார்கள். அப்படி ஒருவராக இருந்த வரலட்சுமி ‘தாரை தப்பட்டை’ படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்திருக்கிறார்.
பொதுவாக பாலா படங்களில் நடிக்கும் நாயகர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். நாயகிகள் சிறப்பாக நடித்திருந்தாலும் நாயகர்களின் நடிப்பு முன்னால் அவர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடும். முதன் முறையாக ‘தாரை தப்பட்டை’ படத்தில் நாயகனான சசிகுமாரின் நடிப்பை விட வரலட்சுமியின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
ஒரு கரகாட்டக்காரராக எந்த விதமான கூச்சமும் இல்லாமல் கிளாமரான ஆடை அணிவதிலிருந்து, கொஞ்சம் ஆபாசமான நடனம் ஆடுவது வரை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் வரலட்சமி. நிஜ ஆட்டக்காரர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு வரலட்சுமியின் நடிப்பு அமைந்துள்ளதாக பொதுவான பாராட்டு வரலட்சுமிக்குக் கிடைத்து வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமியைப் பாராட்டி வருகிறார்கள். இளையராஜாவின் இசையைத் தாண்டி ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியின் நடிப்பு மட்டுமே பலரையும் கவர்ந்த விஷயமாக உள்ளது.
-http://www.athirvu.com
இங்கே இந்தப்படத்தை வெளியிடவில்லை !
மூன்று தெலுங்கர்களின் (நடிகர் .தயாரிப்பு)படங்கள் தாமரை திரையரங்குகளில் காண்பிக்கபடுகிறது… பொங்கலுக்கு வெளியாகிய படம் !! இடியாப்ப சிக்கல்போல் ஏன்னா தமிழன் நிலை இடியாப்ப சிக்கலில்தான் உள்ளது ..