ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி திரளும்!

cinema_001இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று கூடிய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் பெப்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலக சங்கங்கள் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பின் போது, நாசர், ஆர்கே. செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைக்கையில்,

பேரறிவாளன், உட்பட 7 தமிழர்களின் மரணை தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு குறைத்தது.

இந்நிலையில், அடுத்த நாள் சட்டமன்றத்தை உடன் கூட்டி தண்டனை குறைக்கப்பட்டவர்களுக்கு விடுதலை செய்வதாக தமிழக அரசாங்கம் அறிவித்து.

எனினும் அந்த தீர்ப்பை தடை செய்ய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இந்நிலையில் குறித்த எழுவரின் விடுதலை சாத்தியம் இல்லை என்றும், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையிலேயே நாங்கள் முதல்வரிடம் குறித்த கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.

குறித்த ஏழு பேரும் தமது தண்டனைக்காலமான 25 ஆண்டுகளை கடந்து விட்டார்கள் எனவே அரசியலமைப்பின் 161வது பிரிவைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நாம் நேரில் வலியுறுத்துவோம்.

இதேவேளை, இது வெறும் கடிதமாக அமைந்து விடக்கூடாது என்பதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் திரண்டு பேரணியாக முதல்வரிடம் சென்று எமது கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கின்றோம்.

நாங்கள் திரையுலகத்தினர் ஒட்டுமொத்தமாக பேரணியாக திரளும் போது பொது மக்களிடத்திலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார்கள்.

-http://www.tamilwin.com