பீப் பாடலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பிச்சைக்காரன்

பீப் பாடலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பிச்சைக்காரன் - Cineulagam

சசி அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து வரும் படம் பிச்சைக்காரன். இப்படத்தில் இடம்பெறும் Glamour பாடல்அண்மையில் வெளியாகி இருந்தது.

லாகன் எழுதியிருக்கும் இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளதாக பிரச்சனை எழுந்துள்ளது.

கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்

தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்

என்ற பாடல் வரிகள் இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறது.

இப்பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவுப்படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com