மீண்டும் பிப்ரவரியில் குவியும் படங்கள் – என்ன செய்யபோகிறது திரையுலகம்

மீண்டும் பிப்ரவரியில்  குவியும் படங்கள் - என்ன செய்யபோகிறது திரையுலகம் - Cineulagam

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு இயக்குனரின் தலையெழுத்து இருக்கிறது என்பார்கள். ஆனால் தற்போது உள்ள சினிமா நிலவரத்தில் 4, 5 இயக்குனர்களின் தலையெழுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தள்ளாடுகிறது என்பது தான் உண்மை.

இந்த பொங்கலன்று வெளியான நான்கு படங்களும் பெரிய படங்களுக்கு நிகராக உள்ள படங்கள். ஆனால் நான்கும் திரையரங்கு சரியாக கிடைக்கததால் வசூலில் தள்ளாளுகிறது. இந்த நிலைமை தற்போது பிப்ரவரி மாதம் தொடர்கிறது. பிப்ரவரி 5ம் தேதி பெங்களூர் நாட்கள் மற்றும் பிரஷாந்தின் சாஹசம் படமும் வெளியாகவுள்ளது, அதே போல் வருகிற 12ம் தேதி கிட்டத்தட்ட நான்கு படங்கள் (காதலும் கடந்து போகும் , மிருதன், ஜில் ஜங் ஜக் , சௌகார்பேட்டை ) வெளியாக உள்ளது.

இந்த நான்கும் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள், இவை அனைத்தும் ஒரே நாளில் வெளியானால் கண்டிப்பாக ஒவ்வொரு படத்தின் வசூலும் பாதிப்புக்குள்ளாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் பெரும் சோகம் என்னவென்றால் நல்ல படங்கள் கூட இதில் காணாமல் போகிற நிலைமை ஏற்படுவது தான். இது திரையுலகத்துக்கு நல்ல சூழலை ஏற்படுத்தாது.

-http://www.cineulagam.com