மலையாள – தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-http://www.dinamani.com



























அனுதாபங்களை தெரியப்படுத்தி கொள்கிறோம் .