குத்துச்சண்டை வீரர்களைப் பெருமைப்படுத்திய மாதவன்!

இறுதிச்சுற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுதா, நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாக்சர் சாம்பியன் பேசும் போது, சிவகார்த்திகேயன் எங்களுக்கு பிடிக்கும், ஆனால் அது பாக்ஸர்களை கேவலப்படுத்தும் விதமாக ’மான் கராத்தே’ படம் இருந்தது. அந்த படத்தில் சில குற்றசாட்டுகள் இருந்ததினால் அந்த படத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தோம். அதை தொடர்ந்து எங்களால் எடுத்து செல்ல முடியவில்லை.

ஆனால் இறுதிச்சுற்று படத்தை பார்த்த பிறகு இயக்குனர் சுதா அவர்களுக்கு தொலைபேசி மூலமாக நான் வாழ்த்துக்கள் சொன்னேன். இந்த படம் பாக்ஸர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. படத்தைப் பார்த்த பிறகு பாக்ஸர்கள் அனைவருமே மகிழ்ந்தோம்.

தமிழில் ஒரு பாக்சிங் படத்தில் உண்மையான பாக்சர்கள் நடித்த முதல் படம் என்றால் அது இந்த படம் மட்டும் தான். இதனால் இந்திய பாக்சர் டீம் அனைவரும் இந்த படத்தை வரவேற்த்திருக்கிறார்கள் என்று கூறினார்.

-http://cinema.nakkheeran.in