சென்னை: போலீசால் தாக்கப்பட்ட தஞ்சை விவசாயி பாலனின் வங்கிக் கணக்கில் நடிகர் கருணாகரன் ரூ.1 லட்சம் தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன் (50).
கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். கடைசி 2 தவணைகள் செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து விவசாயிக்கு சொந்தமான டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், பாலனை சரமாரியாக அடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சினை மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் கருணாகரன் விவசாயி பாலனுக்கு உதவ முன்வந்திருக்கிறார். அவர் பாலனின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இது குறித்து கருணாகரன் கூறுகையில், இந்த பணம் உங்கள் டிராக்டரை மீட்க உதவும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயி பாலனின் கடனை தான் ஏற்பதாக நடிகர் விஷாலும் அறிவித்துள்ளார்.
வாழ்த்துகள்! காலம் அறிந்து செய்த உதவி! வாழ்க! வளர்க!
கருணா உங்களுக்கு ஏம்பா இந்த விளம்பரம் ,,உதவி செய்தால் யாருக்குமே தெரியாமல் செய்ய வேண்டும் ஐயா ,அதுதானே புண்ணியம் ,,,. நடிகண்டா