பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கு 2016 ஜனவரி 28-ல் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 1952-ல் திரைவாழ்வைத் தொடங்கிய பி.சுசீலா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் ஜோடிப் பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியுள்ளார்.
-http://www.tamilwin.com
வாழ்த்துக்கள். பழம்பாடல் விரும்பி.
வாழ்துகள் அம்மா
பி.சுசீலா பாடிய முதல் தமிழ் திரைப்பாடல், பெற்ற தாய் படத்தில் இடம்பெற்ற ‘ஏதுக்கு அழைத்தாய்’
இவரை ரொம்பவும் அதிகம் பிடிக்கும், இரவில இவர் பாடல்கள் அப்பப்பா, தேன் சொட்டும் அந்த இனிய குரல், ஆனால் அண்மையில் இவரைப் பற்றியும் ஒரு செய்தி வந்தது. நம் நாட்டு கலை நிகழ்ச்சியில் இவருடன் பாடிய நமது உள்ளூர் பிரபல கலைஞரான திரு எம்.எஸ். பிரிட்டோ அவர்களை, தவறாகப் பாடிவிட்டார் எனக்கூறி மேடையிலேயே பாட்டை நிறுத்தி மீண்டும் பாட வைத்து அவமதித்தார் இந்த அம்மையார் என ஒரு செய்தி, நமது நாட்டு நாளிகை ஒன்றில் ஒரு கலைஞரால் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தாலும் அவர் சாதனைக்கு நமது பாராட்டுக்கள். நமது நாட்டு கலைஞர்களும் இதுபோல் தரணி சிறக்க புகழ் பெற வேண்டும். அதை செம்பருத்தி செய்தியாக வெளியிட வேண்டும்.
வாழ்த்துக்கள்.
nalla saitihal ungalukku valthukkal.anathu mail ukku anuppungal pl.
தேன் சொட்டும் மதுர கான குயில் பி.சுசிலா அம்மா அவர்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் பாராட்டுகள் பல உரித்தாகுக ….