சென்னை: மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள் அது என்னுடைய படமாக இருந்தாலும் என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது.
விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன், ஏ.ஆர்.ரகுமான், கார்த்தி, சிவகுமார், விக்ரம் குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘சரியான படம்னா அத ஜெயிக்க வைங்க. தப்பான படம் அத நானே பண்ணாலும் ஜெயிக்க வைக்காதீங்க” என்று கூறி அதிரடித்தார். தொடர்ந்து கார்த்தி பேசும்போது இந்தப் படத்தில் 3 வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார். அதில் மணி என்ற கதாபாத்திரமும் ஒன்று என்று தனக்குத் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் ஹரி ‘நேற்று தான் இப்படத்தின் ட்ரைலர் பார்த்தேன், படம் எப்போது பார்ப்பேன் என ஆர்வம் அதிகமாகி விட்டது, சிங்கம் 3 இன்னும் 5 மாதங்களில் வெளிவரும்’ எனக் கூறி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை #24audiolaunch என்ற ஹெஷ்டேக்கில் சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டடிக்க வைத்தனர். குறிப்பாக விழாவில் சூர்யா பேசிய சமூகக் கருத்துக்களை அதிகளவில் பகிர்ந்து தங்கள் மாஸை நிரூபித்தனர். இதனால் தற்போது வரை #24audiolaunch ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் ரகுமான் இசையில் பாடல்கள் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.
சைத்தான் வேதம் ஓதுகிறது.
பெரும்பாலும் நடிகன் என்பவன் ரசிகனின் மாற்றுப்பிரதியாகத்தான் ர்சிகனால் பார்க்கப்படுகிறான். நடிகனின் நடிப்பு மட்டுமன்றி உடல்மொழி, பேசும் வசனங்கள், ஆகியவையும் ரசிகனை ஆக்ரமிக்கின்றது. பொன்மனச்செம்மலின் படத்தைப் பார்த்து திருந்தியவர்களையும், நற்பண்புகளுடன் வாழ்பவர்களையும் இன்றும் காணமுடிகிறது. அதேவேளை இன்று பெண்ணை போகப்பொருளாகவும், காதலை காமமாகவும் சித்தரித்து இளையோர் நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பதே சினிமாவின் வேலை என்றாகிவிட்டது. அதைத்தாண்டி போதிதர்மர் போன்ற அற்புதமான படத்தில் தங்களின் சிறந்த நடிப்பைக் கண்டதில் மகிழ்ச்சி. “மோசமான என் படத்தை பார்க்காதீர்கள்” என்று கூறுவதை விடுத்து, “மோசமான படங்களில் நான் நடிக்கமாட்டேன்” என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பு. நல்ல மனிதநேயராக உலகில் அறியப்படுகிறீர்கள். பாராட்டுக்கள், தொடர்க, வாழ்க.