‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்! ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
-http://www.dinamani.com



























அதானே, ஊழல் பெருச்சாளிகள் உண்மை நிலவரங்களை வெளியே அறியவிடுவார்களா ? பணத்தைக் கொட்டி மூடி மறைக்கதானே பார்ப்பார்கள். எப்பொழுதும் மக்களை அறியாமையிலும், பதற்ற நிலையிலும் வைத்து , தாங்கள் நினைத்தை சாதித்துக்கொள்ளும் இந்த பணக்கார வர்க்கம், உண்மை தெரிந்து , மக்கள் விழிப்படைந்து விட்டால் அவர்களை மேலும் ஏமாற்றி சுரண்ட முடியாது அல்லவா ? இயக்குநர் மணி நாகராஜ் அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வேண்டும். வாழ்த்துக்கள்