பிரசாத பொருட்களுடன் வந்த இளையராஜாவை பெங்களூர் அதிகாரிகள் ஒருமணிநேரம் காக்க வைத்தது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், நம் தாய்த் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள மாமனிதர்களுள் ஒருவர்தான், தென் தமிழ்நாட்டின் பண்ணைப்புரம் தந்த இசைப் பேரரசர் இளையராஜா அவர்கள்.
தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் அமைத்த இசை காலங்களைக் கடந்து ஒலிக்கும் பெருமைக்குரியது.
ஆசியக் கண்டத்தில் ஒரு ஜப்பானியனோ, சீனாக்காரனோ, கொரியாக்காரனோ சாதிக்க முடியாததை சிம்பொனி இசைஅமைத்து அகிலத்தின் பல்வேறு இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர், அவர் சிறந்த கவிஞரும் கூட.
அவரும், அவரது குடும்பத்தினரும் ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு, பிரசாதப் பொருட்களுடன் சென்னை பயணிக்க பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள், கோவில் பிரசாதப்பொருட்களை அனுமதிக்காததுடன், இளையராஜா அவர்களின் விளக்கத்தையும் ஏற்காமல் ஒரு மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
அடக்க உணர்ச்சியும், உயர் பண்பு நலன்களும் கொண்ட இளையராஜா அவர்கள்சி ம்பொனி இசையால் உலகமே மெச்சியபோது, இந்திய அரசுத் தொலைக்காட்சி, அந்தச் செய்திகளை இருட்டடிப்புச் செய்தது, ஒருசாதனைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நாடாளுமன்றத்தில் குமுறலோடு உணர்வுகளைப் பதிவு செய்தவன் என்ற வகையில், பெங்களூரு விமான நிலைய சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
இந்த முறையற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://news.lankasri.com
எல்லாம் சூத்திர வடுக ஆக்கிரமிப்பில் தமிழன் அவமானபடுத்த படுகிறான் ..தமிழர்களின் பழங்கால வரலாற்று ஆலயங்களில் தெலுங்கு கலவாணிகளால் சிலைகள் திருடி வெளிநாடுகளுக்கு விக்கிரானுங்க ..ஆந்திர தொழிலதிபர் சென்னை வீட்டில் சோழர் கால சிலைகள் மீட்பு ! சென்னை வானூர்தி நிலையத்தில் வடநாட்டவர் ஆதிக்கம் தமிழர்களிடம் இந்தியில் பேசுகிறானுங்க கேக்கிறவனுக்கு இந்தி புரியுமா புரியாதா அதைபற்றிய எண்ணமே அவனுங்களுக்கு இல்லை …தமிழக பொருளாதாரம் தெலுங்கர்கள் மற்றும் மார்வாடிகளின் கையில் …கடைவரிசைகளில் தெலுங்கும் இந்தியும் இருக்கும் அளவுக்குகூட தமிழ் இல்லை …வடுகனுங்க ஆக்கிரமிப்பில் தமிழ் இனம் சிக்குண்டு சீரழிகிறதே நாம் என்ன செய்யபோகிறோம் …
விமான நிலையத்தில் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள்! அவர்களிடம் போய் இளையராஜாவின் சாதனையைப் பற்றி பேசுவதில் என்ன பயன்? அமெரிக்கா போகும் இந்தியத் தலைவர்களையே அங்குள்ள விமான நிலையைப் போலிசார் அவர்களைக் காக்க வைக்கிறார்களே! அதுவுமின்றி உடைகளைக்களைந்து சோதனைச் செய்கிறார்களே! அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்கிறார்கள்! இதில் என்ன தமிழனுக்கு இழைக்கப்பட்டத் துரோகம்?
தங்கள் கருத்தை யமும் ஆதரிக்கிறேன் நண்பரே.
தங்கள் கருத்தை யாமும் ஆதரிக்கிறேன் terah
சென்னை மட்டுமல்ல தென்இந்தியாவின்அனைத்து மாநிலங்களிலும் உள்ள விமான நிலையத்தில் வடநாட்டவர்கள்தான் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். இதேபோல் வடஇந்தியாவின் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள விமான நிலையத்தில் தென்இந்தியர்கள் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
+++++++++++
நாங்கள் தமிழர்களை மட்டுதாம் பேசுகிறோம் ,என் என்றால் நாங்கள் தமிழர்கள் .
எதிலும் ஒரு நாகரீகம் வேண்டும்..! குரங்கு கூட்டமாக ஆளாளுக்கு கையில் பொட்டலத்துடன் போய் நின்றால், பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்வார்கள்…?நீர் யாராக இருந்தால் என்ன…! நியாயமான விதிகளை கடைபிடிக்க வேண்டியது தானே? சிம்பொனி இசை அமைத்து அகில உலகத்தை ஆட வைத்த உம்மை அனைவரும் அறிந்திருக்கக் தெரிந்துக்க வேண்டிய அவசியம் இல்லையே ..!
பெங்களூரு விமான நிலையத்தில் தன்னிடம் நடத்தப்பட்ட சோதனையை பெரிது படுத்த வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்டோரை சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் கொண்டுவந்த பையில் தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளது. அவற்றை சோதனை செய்த அதிகாரிகள், பிரசாதப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்துள்ளார். கார்த்திக்ராஜா படம் எடுத்ததைப் பார்த்த அதிகாரிகள் அவர்களை மேலும் ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்திருக்கின்றனர்.
கடைசியாக கார்த்திக் ராஜாவின் மொபைலில் இருக்கும் படங்களை அழிக்கச் சொல்லிவிட்டு கிளம்ப அனுமதித்திருக்கின்றனர். முதல் முறையாக பிரசாதப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை பாதுகாப்பு அறையில் 1 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
மேலும், பிரசாத பொருட்களை வெடிகுண்டை போல், பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த விதம் இளையராஜாவிற்கு கோபத்தையும்,மன வருத்தத்தை கொடுத்தாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் அதிகாரிகள் தலையிட்டு, இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டதோடு, அவரை பிரசாதத்துடன் விமானத்தில் செல்ல அனுமதித்தனர்.
உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்களாலும், இந்திய சினிமா ஜாம்பவான்களாலும், தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் இளையராஜா அவர்களை விமான நிலைய அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் காக்க வைத்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இளையராஜா “பொதுவாக எல்லா விமான நிலையங்களிலும் நடத்தப்படும் சோதனைதான் என்னிடம் செய்யப்பட்டது. அதிகாரிகள் அவர்களின் பணியை செய்தார்கள். நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
இதைவிட பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்துள்ளேன். என்னை காக்க வைத்ததால் நான் ஒன்றும் சிறுமை அடையவில்லை. நான் எப்பவும் ராஜாதான். எனவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.நன்றி வெப்துனியா செய்திகள்…
puchandy !
என்ன குரங்கு கூட்டமாக… என்று கூறிவிட்டீர்கள், நான் வாத்து மடயன் கூட்டம் என்றல்லவா நினைத்திருந்தேன்.
எப்பொழுது இந்த வடிக பெருச்சாளி தமிழன் ஆனான் ?
ஒண்ட வந்த பிசாசு ஊர் பிசாசை விரட்டியதாம் , இந்த வடுகனிடம் யாராவது சொல்லுங்கள் , தமிழ் / தமிழரை வைத்து மலிவான விளம்பரம் தேட வேண்டாம் என்று ….