தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கள் குடும்பத்தோடு திரையரங்குக்கு செல்வது பெரிய செலவாக மாறிவிட்டது.
இதனால் திருட்டுவிசிடிக்களின் தொல்லை குறைந்தபாடில்லை. ஆகையால் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து தமிழக அரசிடம் 50 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்வது மாதிரி திரையரங்கு உருவானால் தமிழ் சினிமா லாபம் அடையும் இது பற்றி அரசு யோசிச்சு செயல்பட்டாங்க என்றால் நன்றாக இருக்கும்” என்று தனது கோரிக்கையை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இன்று நடந்த தகடு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தெரிவித்தார்.
அடுத்து பேசிய தயாரிப்பபாளர் பட்டியல் சேகர் “முதலில் சீரியல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும், ஒரு குடும்பம் சீர்குலைவது இந்த சீரியல்களால் தான். ஆண்கள் படம் நல்லா இருந்த திரையரங்குக்கு சென்று பார்ப்பார்கள்” என்று கூறினார்.
-http://www.cineulagam.com