சென்னை: ரஜினியின் கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்களாம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும், இயக்குநர் ரஞ்சித்தும்.
கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது கபாலி படம். லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ரஜினி படம் என்பதால் டிரைய்லர் முதல் டிக்கெட் விற்பனை வரை அனைத்திலும் சாதனை படைத்தது கபாலி.
இப்பட ரிலீசை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடினர். எங்கெங்கு காணினும் கபாலி மயமாகத் தான் இருக்கிறது கடந்த சில நாட்களாக.
இந்நிலையில், கபாலி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறாராம் தாணு. இதனை ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர், “கபாலி படத்தின் கிளைமாக்ஸை நாங்கள் தொடரும் விதத்திலேயே முடித்துள்ளோம். எனவே, விரைவில் அதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என நானும், இயக்குநர் ரஞ்சித்தும் ஆர்வமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினி மட்டும் ஓகே சொல்லி விட்டால், இரண்டாம் பாகத்திற்கான வேலைகளைத் துவக்கி விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் பணியாற்ற எல்லோரையும் மீண்டும் ஒன்றிணைக்க இருப்பதாகவும் அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதே தகவலை இயக்குநர் ரஞ்சித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், “கபாலி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை புரிந்துள்ளது. எனவே, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
மலேசியத்தமிழர்களை கொச்சப்படுத்திய கபாலி இயக்குனர் தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம்.. தமிழகம் போய் வந்தபின் முடிவு தெரியும்.
மலேசியத்தமிழர்களை கொச்சப்படுத்திய கபாலி இயக்குனர் தயாரிப்பாளர்..?
ஐயா கொஞ்சம் புரியும்படி விளக்கமாகச் சொல்லுங்க…
Pon Rangan ,அவர்களே நீங்கள் நடவடிக்கை எடுங்க ,நாங்களும் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கிறோம் ,ஒரு கை பார்ப்போம் ,நாட்டிலே கோவில்கள் பல இடங்களில் உஅடைபடுகிறது அதை போயி நடவடிக்கை எடுங்கள் ,அந்த படங்களில் வரும் கருத்துக்களை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று ,ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் ,ஆதரவாளர்களையும் நாங்கள் நீமன்றத்துக்கு அழைத்து வரோம் ,பார்க்கலாம் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை .உங்களுக்கு இது ஒரு நல்ல தருணம் காதலியுடன் மோதி உங்கள் பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள் ,அசல் ருசியான நண்டு நீங்கள் ,,கபாலியின் மூலமாக நாங்கள் இப்பாட்டான் ஒரு சில தமிழ் நண்டுகளை பார்க்க முடிகிறது ,நன்றி ,,,ரசிகர்களுடன் நீதி மன்றத்தில் சந்திக்கலாம் .கபாலி வனிதாவுடன் வாறீங்க ,இதுக்கு முன்பு புடிங்கி கிடடா இருந்தீங்க ,,நாங்களும் தமிழர்கள் தான்..பார்ப்போம்
இதிலிருந்தே போன் ரங்கன் எப்படிப்பட்ட மனிதர் என்று தெரிந்து கொள்ளலாம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாதவர் போல் பேசுகிறார்! ம.இ.கா. வினர் சொல்லலாம்! அவர்கள் பட்டம் பதவிக்கு அலைகிற கூட்டம். இப்போது இவருக்கும் அந்த ஆசை வந்து விட்டதோ!
அய்யய்யயோ மலேசிய தமிழனை கபாலி கொச்சப்படுத்தி படுத்திட்டாராம் அடங் கொய்யால மலேசிய தமிழன்னு சொல்லிக்கிட்டு மலேசிய தமிழனையும் தமிழக தமிழனையும் கருத்துக்கள்ன்னு பேர்ல இந்த பகுதியில் கொச்சை படுத்துபவனை முதலில் புடுங்கு அப்புறமா தமிழகம் போய் கபாலியை புடுங்கிட்டு வந்தபின் கத்தை கட்டலாம்.
இயக்குனர் ஒரு தமிழர் …
எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் பெயர்போட்டவர் ..
தனது மூன்றாவது படத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள கன்னட தமிழ்பட நடிகரை இயக்கி உடகங்களில் பேசப்படும் ஒரு நபராக உயர்ந்து நிக்கிறார் ..
ஏன் போன்ரங்கன் சார் இந்த வேண்டாத வேலை ?
தாங்கள் பல அமைப்புகளின் பதவியில் உள்ளீர்கள் ..
தமிழர்கள் வியாபாரத்துறையில் மிகவும் குறைவாக உள்ளார்கள் ..
புதிது புதிதாக தமிழரல்லாதார் வியாபார துறையில் முன்னேறி சகல வாய்ப்புக்களையும் ஒருசாராரே அனுபவிக்கிறார்கள் அவர்களுக்குல்லாறே பங்குபோட்டு கொள்கின்றனர் …
ஒரே ஆளு ஒன்னு ரெண்டு அல்ல பல தீபாவளி கடைகளை தன் ஆளுங்களை வைத்து எடுத்து அவுகபேரிலேயே பதிவுசெய்து ஜோரா வியாபாரம் பன்னுறாங்கே ! தமிழர்கள் இப்போ அருகில்கூட நெருங்க முடிவதில்லை வியாபாரத்துறையில் ..மாபியா ரேஞ்சுல வியாபாரம் ஓடிகிட்டு இருக்கு ..தமிழர்கள் யாராச்சும் சிறுவணிகம் செய்யலாம்ன்னு வந்தா காளிபயளுவ இடையுறு ..என்ன நடக்குது !
போன்ரங்கன் சார் திவாளி தமிழன் பண்டிகை அல்ல இருந்தும் நம் மாக்கள் கொண்டாடுதே ..நாம் நுகர்வோராக இருந்தால் தமிழரல்லாதார் பயன்பெறுவர் தமிழர் உற்பத்தி பொருட்களை சில இடங்களில் புறக்கணிக்க படுகிறது அந்நியர்களின் வணிக நிலையங்களில் காட்சிபடுத்தாமல் முடக்க படுகிறது ! இதனால் தமிழ் உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அந்நியர்களிடம் விற்பார்கள் இதனால் பல தமிழர்களுக்கு வேலை பறிபோகும் ..இந்தியர்களின் பல வணிக நிலையங்களில் பெரும்பாலும் அவர்களின் இனத்தவர்களே பணிக்கமர்த்தியுள்ளனர் ..
நம் வணிகர்கள் தொழிலதிபர்கள் மொழிக்கும் இனத்துக்கும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் உதவுவார்கள் .அன்னியர்கள் செய்வார்களா ? ஆகவே தாங்கள் வரும் தீவாளி வியாபார வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்கள் அதிகமாக வாழும் மாநிலத்துக்கு பத்துபேருக்காவது கடைகளை பெற்றுக்கொடுங்க ..தங்கள் பல அமைப்புகளில் பொறுப்பு வகிக்கிறீர்கள் பல பேரோடு தொடர்பு வைத்திருப்பீர்கள் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் அறிவோம் …உதவுங்கள் ..தங்கள் தமிழ் இனத்தின்மீது தீர பற்றுள்ளவர் ..இதை செய்வீர்கள் ..தங்களுக்கான அங்கீகாரம் மக்களால் தமிழ் மக்களால் வழங்கப்படும் ..நன்றி பொன்ரங்கன் சார் ..