உலக அளவில் 6-வது இடம் – கபாலி வசூல் சாதனை!

thanu-kabali

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் “கபாலி”. உலகம் முழுக்க பெரும் வரவேப்பை பெற்றது கபாலி. கபாலி வெளியான அன்று அதை ஒரு மாபெரும் கொண்டாட்டமாக நிகழ்த்திக் காட்டினார்கள் ரஜினி ரசிகர்கள். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30 நாடுகளுக்கும் மேலாக படம் வெளியானதால் எங்கு பார்த்தாலும் கபாலி பேசப்பட்டது. படம் வெளியாகி பல வகையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மீண்டும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ரஜினியின் “கபாலி”. உலக அளவில் ஆறாவது இடத்தில் கபாலி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலவுகிறது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பல ஆயிரங்கள் கொடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் தயாராக இருந்தனர்.

உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமான தியேட்டர்களில்  திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. கபாலி உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ இந்தி படத்திற்கு முதல் நாள் வசூல் ஆன ரு.36 கோடி  சாதனை என்று கூறப்பட்டது. இது அதையும் மிஞ்சி இருக்கிறது. இது இந்தி படங்களுக்கு கூட இல்லாத மிகப் பெரிய வசூல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் கபாலி 22 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை வசூல் விவரம் (சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி)

தமிழ்நாடு-ரூ.47 கோடி

ஆந்திரா-தெலுங்கானா-ரூ27 கோடி

கர்நாடகா-ரூ.20 கோடி

கேரளா-ரூ.10.5 கோடி

இந்தியாவின் மற்ற பகுதிகள்- ரூ.23.5 கோடி

மொத்தம் ரூ.128 கோடி வசூல் செய்து உள்ளது.

இந்தியாவுக்கு வெளியே கபாலி ரூ.87 கோடி வசூல் செய்து உள்ளது

அமெரிக்கா – கனடா- ரூ.27 கோடி

மலேசியா/ சிங்கப்பூர்-ரூ.28 கோடி

ஐக்கிய அரபு எமிரேடு, வளைகுடா நாடுகள்-ரூ.21 கோடி

இங்கிலாந்து,இந்தியாவின் மற்ற பகுதிகள்-ரூ.11. கோடி

மொத்தம் ரூ.87 கோடி

கடந்த 3 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் எது என்பதன் விவரம் வெளிவந்துள்ளது,

இதில் உலக அளவில் கபாலி 6 வது இடத்தில் உள்ளதாம்.

 1. ஸ்டார் ட்ரெக் (StarTrek) – $89.6M

2. டார்ஜன் (Tarzan) – $51.1M

3.ஐஸ் ஏஜ் (IceAge) – $51M

4.ஸ்கிப்டிரேஸ்( Skiptrace) – $44M

5.செல்லப்பிராணிகள் வளர்ப்பு சீக்ரெட் லைப் (The Secret Life of Pets)- $39.3M

6. கபாலி Kabali – $32M

ரஜினியின் கபாலி நான்கு நாட்களில் எந்திரன், தெறி படங்களின் வசூல் சாதனையை முறியடித்து ரூ.343 கோடி வசூலித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

-http://cinema.nakkheeran.in

கபாலி முதல் வார வசூல் ரூ.389 கோடி – தயாரிப்பாளர் தாணு தகவல்

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வசூலில் தினமும் ஒரு சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டியுள்ளது என தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு கூறுகையில், கபாலி வெளியாகிய ஏழு நாட்களில் ரூ.389 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. நூறு வருட சினிமா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. ரூ 500 கோடி வசூலை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் எட்டிவிடும் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அவ்வாறு 500 கோடியை தாண்டினால், கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம்.

tamil.oneindia.com