இந்திய சினிமாவில் இதுவரையிலான அத்தனை சாதனைகளையும் முறியடித்து வெற்றிநடை போடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி. நேற்று வரையில் என்னன்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் இதோ…
இந்தியாவிலேயே பெரிய ஓப்பனிங்
இன்னும் துல்லியமான வசூல் நிலவரம் வரவில்லை. ஆனால் முதல் நாள் இந்திய வசூல் ரூ 60 கோடிக்கு மேல் என்கிறார்கள். இந்த வகையில் இதற்கு முந்தைய ரெக்கார்டு பாகுபலி. 42.5 கோடிதான் முதல் நாள் வசூல். அதனை நொறுக்கித் தள்ளிவிட்டார் ரஜினி, கபாலி மூலம்.
ரிலீஸான முதல் வார இறுதி கலெக்ஷன் தான் ஒரு படத்துக்கு மிக முக்கியம். வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படத்தின் வெள்ளி, சனி, ஞாயிறு கலெக்ஷன்தான் வார இறுதி கலெக்ஷன். அமீர்கான், அபிஷேக் பச்சன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான தூம்3 தான் அதில் நம்பர் ஒன்னாக இருந்தது. 10.3 மில்லியன் டாலருடன் முதல் இடத்தில் இருந்த தூம்3 யை 16 மில்லியன் குவித்து பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு சென்றுள்ளது கபாலி.
ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங், விநியோக உரிமை, சாட்டிலைட், ஆடியோ உரிமை ஆகியவை மூலம் வருமானம் பார்த்துவிடும். அந்த வகையில் ரிலீஸுக்கு முன்பே கபாலி 225 கோடி ஈட்டியுள்ளது. இதற்கு முன்பு பாகுபலிக்கு 162 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கனடாவிலும் திரையிடப்படும் ப்ரீமியர் ஷோ எனும் சிறப்புக் காட்சி வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு 2 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது கபாலி. இதற்கு முந்தைய சாதனை பாகுபலி. 1.4 மில்லியன் டாலர்ஸ்.
தமிழ் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் சாதனையை இதுவரை வேதாளம் கையில் வைத்திருந்தது. வேதாளம் படத்தின் ஓப்பனிங் 15 கோடி. ஆனால் கபாலி படத்தின் ஓப்பனிங் 24.5 கோடி. இனியும் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு கபாலி நம்பர் ஒன் இடத்துக்குச் சென்றிருக்கிறார்.
தமிழைத் தவிர மற்ற தென் இந்திய மொழிகளான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா நான்கு மாநிலங்களில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஆனது கபாலிக்குத்தான். தென் மாநிலங்களில் முதல் நாளிலேயே ரூ 26 கோடிகளை அள்ளியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணக்கு போட்டாலும் அந்தந்த மாநிலங்களில் நம்பர் ஒன் படம் கபாலியாகத் தான் இருக்கிறது.
வட மாநிலங்களில் வெளியான தென்னிந்திய படங்களில் இதுவரை நம்பர் ஒன் கலெக்ஷனாக இருந்தது பாகுபலி. 5.15 கோடி வசூல். கபாலியின் வசூல் ரூ 5.8 கோடி. இந்த சாதனையும் கபாலிவசம் தான்.
வெளிநாடுகளில் அதிகபட்சமாக வசூல் குவித்த படமாக சல்மான் கானின் சுல்தான் இருந்தது. 23 நாட்களில் 153 கோடி ரூபாய். ஆனால் கபாலி அதை வெறும் ஆறே நாட்களில் முந்திவிட்டது. கபாலியின் மொத்த வெளிநாட்டு வசூல் ரூ 169 கோடி.
பாகுபலிதான் அதிகபட்சமாக நாலாயிரம் திரையரங்குகளில் ரிலீஸானது. ஆனால் யாருமே நெருங்காத வகையில் கபாலி 6500 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கையை 10000 என்று செய்தி வெளியிட்டனர். சீனாவில் வெளியாகியிருந்தால் இந்த எண்ணிக்கை சாத்தியமாகியிருக்கும். நாம் சொல்லியிருக்கும் கலெஷன் சாதனை எல்லாம் நேற்று முன் தின நிலவரம்தான். எனவே இந்த சாதனைப் பட்டியலில் இன்னும் பல சாதனைகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ கிரிக்கெட்டுக்கு சச்சின் போல சினிமாவுக்கு ரஜினி. அவரது கபாலி சாதனைகளை இனி அவரது 2.ஓ தகர்த்தால்தான் உண்டு. வேறு யாராலும் அது சாத்தியமில்லை என்பதே உண்மை!
இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு… அதுவும் இந்தி ஏரியாக்களில்?
இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு… அதுவும் இந்தி ஏரியாக்களில்? Posted by: Shankar Published: Friday, July 29, 2016, 16:59 [IST] வட இந்தியாவில் கபாலி திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்தி பேசும் பகுதியில் ஒரு தென்னிந்தியப் படம் இந்த அளவு வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். ரஜினியின் கபாலி வெளியானதிலிருந்து பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அங்கு சுல்தானை விட அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் 18 கோடியைக் குவித்த கபாலி, வாரத்தின் 5 சாதாரண தினங்களில் மேலும் 22 கோடியைக் குவித்துள்ளது.
இந்திய அளவில் 23 நாட்களில் சுல்தான் படம் ரூ 253 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் வெறும் ஏழு நாட்களில் கபாலி ரூ 175 கோடியைக் குவித்துள்ளது. வரும் வார இறுதியில் சுல்தான் வசூலை கபாலி கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் வட இந்தியப் பகுதிகளில் கபாலி வசூல் ஸ்டெடியாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு வசூலில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது கபாலி. இங்கு 23 நாட்களில் சுல்தானுக்குக் கிடைத்த ரூ 150 கோடி வசூலை, வெறும் 6 நாட்களில் முறியடித்துள்ளது கபாலி. இதுவரை கபாலிக்குக் கிடைத்த வெளிநாட்டு வசூல் ரூ 160 கோடி.
கர்நாடககாரன் நீலகிரி மேட்டுப்பாளையம்வரை வந்துவிட்டான்…
கேரளாகாரன் பொள்ளாச்சி மற்றும் கோவையை ஆக்கிரமித்து விட்டான்…
ஆந்திராகாரன் வேலூர்வரை ஆக்கிரமித்துவிட்டான்…
தமிழ்நாட்டுகாரன் நெருப்புடா.. கபாலிடா…..
#_சாவுங்கடா