கபாலி படம் லாபம் என்றால் ஒரு பகுதியை சமூக நலனுக்கு பயன்படுத்துங்கள் – நீதிமன்றம் உத்தரவு

கபாலி படம் லாபம் என்றால் ஒரு பகுதியை சமூக நலனுக்கு பயன்படுத்துங்கள் - நீதிமன்றம் உத்தரவு - Cineulagam

கபாலி படத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறி வலைதளங்களில் படம் வெளியாகி இருந்தது. இதுகுறித்து தாணு தொடர்ந்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவு மீறி இணையதளங்களில் படம் வெளியானது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். மேலும், கபாலி படம் பற்றியும் சில கருத்துக்களை கூறினார்.

கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும். இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிறப்பிக்க தயாராக உள்ளேன் என்று கருத்து தெரிவித்தார்.

அதற்கு தாணுவின் வக்கீல், ஏற்கெனவே மனுதாரர் பல உதவிகளை செய்து வருகிறார். கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாயிலும் ஒரு பகுதியை அதேபோல சமுதாய நலனுக்கு செலவு செய்வார் என்று கூறினார்.

-http://www.cineulagam.com