சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று கபாலி பொம்மை விற்று நல்ல பணம் பார்த்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 5 பேர் சேர்ந்து துவங்கிய நிறுவனம் கார்பன் காப்பி கலெக்டிபிளிஸ்.
இந்த நிறுவனத்துடன் கபாலி பட விளம்பரத்திற்காக கை கோர்த்தார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி அந்நிறுவனம் கபாலி படத்தில் வரும் கபாலீஸ்வரன் கதபாத்திரம் அதாங்க ரஜினியின் உருவ பொம்மைகளை செய்து விற்பனை செய்தது. அந்நிறுவனம் 40 ஆயிரம் பொம்மைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் 85 சதவீத பொம்மைகள் விற்றுவிட்டன.
16.5 செ.மீ. உயரமுள்ள கபாலி பொம்மையின் எடை 300 கிராம். அதன் விலை ரூ. 1,986 ஆகும். கபாலி படம் மட்டும் கல்லாகட்டவில்லை. கபாலி பொம்மையை விற்று இந்த நிறுவனமும் கல்லாகட்டியுள்ளது. கபாலி பொம்மை விற்பனை ஜூன் மாதம் இரண்டாம் வாரம் துவங்கியது.
கபாலி பொம்மையை இந்தியாவில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்தது. மலேசியாவில் மதுரா ஸ்டோர்ஸ் கபாலி பொம்மை விற்பனையை கவனித்தது. அந்த நிறுவனம் முதன்முதலாக பாட்ஷா படத்தில் வரும் மாணிக் பாட்ஷாவின் கதாபாத்திர பொம்மையை செய்து விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை நல்லாவே மொடடை அடித்துள்ளீர்கள்.
திருவள்ளுவர் சிலையை எத்தனை வீட்டில் பார்க்க முடியும்?
இது ஒரு வியாபாரம். அப்படி எடுத்துக்கொள்ளுங்கள். இதையே ஒரு சீனன் செய்திருந்தால் ஆகா, ஓகோ என்று பாராட்டுவீர்கள்! குதர்க்கமாகவே சிந்தித்துப் பழகிவிட்டீர்கள்!
உலகத்தில் எல்லோரும் ஒரே மாதரி யோசிக்க மாடடார்கள். காத்தடிக்கும் நேரம் மாவு விற்பவர்களையும், மலை பெய்யும் பொழுது உப்பு விற்பவர்களும், அறிவாளிகள் என்று ஏற்று கொள்ளவே மாடடார்கள். இதில் உப்பையும் மாவையும் குறை சொல்லுபவர்களை மலேசியாவில் என்ன சொல்வது ?
abraham terah நீங்கள் கூறுவது உண்மையே –மாற்று கருத்து கிடையாது– நான் ஆதங்கப்பட்டேன் அவ்வளவுதான் திருவள்ளுவருக்காக.
நண்பரே! நீங்கள் சொல்லுவதில் உண்மை இருந்தாலும் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் சிலையை அழகுக்காக வைக்கலாம். அவ்வளவு தான். திருக்குறளை வீட்டில் வைத்திருக்கலாம். அவ்வளவு தான். அதனை நாம் படிக்கப்போவதும் இல்லை அப்படி வாழப்போவதும் இல்லை! இன்றைய தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரைப் போல் வாழ்வதில் இந்தக் கோடிக்கணக்கான தமிழர்களில் ஒரு பத்துப் பேர் கூட தேறமாடடார்கள்! சும்மா பேசலாம்; எழுதலாம்! அவ்வளவு தான். நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்!
திருவள்ளுவர், அவர் சிலையை வீட்டில் வைத்திருக்க சொல்லவே இல்லை. அவர் கூறிய நீதிகளை மட்டும்தான் கடைபிடிக்க சொல்கிறார். இன்று நாம் வீட்டில் வைத்து பழகிவிட்டால், நாளை நம் சந்ததியினர் அவருக்கு ஒரு விழா நாள் எடுத்து, பிறகு அதுவே பூஜை புனஸ்காரம் என்று மாறி விடும். எனவே நீதி நெறிகளை அறிந்து தெளிவோம். அதுவே திருவள்ளுவருக்கு செய்யும் மரியாதை.
யாரும் அவருடையசிலையை வைக்க சொல்லவில்லை–ஆனால் வைப்பதினால் என்ன தவறு? அவருக்கு அது ஒரு மரியாதை தானே– அவரை வணங்குவதில் என்ன தவறும் இல்லை.
abraham TERAH அவர்களே– அழகுக்காக அவர் சிலையை வைக்க சொல்லவில்லை– அவர் ஆணழகன் இல்லை- அவரின் பால் நாம் கொண்ட மரியாதையினாலும் மதிப்பினாலும் வைக்கலாம் என்றேன்–அத்துடன் அவரை வணங்குவதிலும் தவறில்லை.
தமிழரின் சைவ சமயம் இதுநாள் வரை போற்றி காக்க குருவருளே துணை!
குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை! உருவ வழிப்பாட்டின் காரணம் இப்போது புரியும் என்று எதிர்பார்ப்போம்.பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர் வரைப்படம் இன்றும் நம் இளையோர் காண வழிவகுத்த நம் முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம்.(இது சத்குருகளுக்கு மட்டுமே பொருந்தும்)
தமிழர்கள் ஆயிற்றே நாம். எப்போதும் குறை பேசியே வாழும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் விளையும் நன்மையே நமக்கு. இதில் ஏன் திருவள்ளுவரை இழுக்கிறீர்கள் ?
en thaai thamizh ..டேய் முதலில் உன் வீட்டில் திருவள்ளுவர் சிலை இருக்கான்னு திரும்பி பாரு .எங்களுக்கும் திருவள்ளுவரை தெரியும் திருக்குறளும் தெரியும் டா ..திருக்குறள் புத்தகம் எழுத படிக்க தெரியாதவன் வீட்டில் கூட இருக்குதுடா .என்னமோ இவருதான் தமிழ் மொழியாய் காப்பாத்துறவரு மாரி பீத்திக்கிறாரு ..தேங்க தலையா
இன்று வரையிலும் திருவள்ளுவரை எங்களுக்கு தெரிகிறது என்றால் ,அப்பவே அவரை பற்றி நாங்கள் தெரிந்து கொண்டதினால் தாண்டா ..போடா போயி வேற வேல இருந்தா பாரு .தெங்கநாம் பட்டி
தமிழண்டா….உலகத்திலேயே கேவலமாண்டா…
வள்ளுவர் தம் சிலையை வீட்டில் வைக்கச் சொல்லவும் இல்லை…அவரின் திருக்குறளையும் வீட்டில் வைத்து பூஜிக்க சொல்லவும் இல்லை..ஆனால் தமிழன் என்றோர் இனமுண்டு..அந்த இனத்துக்கு மொழிப்பற்றும் இனப்பற்றும் இருந்தால் திருக்குறளைப் படித்து அதன் படி வாழட்டும் என்பதற்காகத்தான் 1330 குறட்பாக்களை எழுதினார்…அறிவுடையோரை இதற்கெல்லாம் கட்டாயப்படுத்த தேவை இல்லை…அதாவது அறிவுடையோரை….அறிவுடையோர்க்கு அறிவுள்ளவரால் எழுதப்பட்டது..
வடுக கழிசடைகள் கொக்கரிப்பு …
தமிழர்கள் வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் பெருமைப்படுகிறார்கள்.
தமிழன் ஆங்கிலம் பேசினால் வெள்ளைக்காரன் எம்மை புகழ்வதில்லை ..
நாம் சீன மொழிபேசினால் நம்மை சீனர்கள் புகழ்வதில்லை ..
தமிழர்கள் அந்நியர்கள் தமிழ் பேசினால் பேசுபவர்களை உடனே தமிழராக ஏற்றுக்கொள்கிறார்கள் ..இந்த நிலை தொடர்ந்தால் பரிதாபத்துக்கு உரிய இனமாக வரலாற்றில் மட்டும் பார்க்கமுடியும் .
ஹா ஹா ! ஐயா Mohan mohan அவர்களே– நன்றி. என்னுடைய முதுகை நான் எப்போதே திரும்பி பார்த்தாகிவிட்டது. உன்னுடைய கடுப்பு ஏன் என்று புரிய வில்லை. பரவாயில்லை. வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்– குறள்.
திருவள்ளுவரின் உருவம் யாருக்குமே தெரியாது, இதில் அவருக்கு உருவ சிலை வேண்டும் என்று ஒருவரும், அதை வீட்டில் வைத்து வணங்க வேண்டும் என்று இன்னொருவரும் சண்டை யிட்டு கொள்கிறார்கள். பாவம் திருவள்ளுவர். கரும்பை கொடுத்தால், அதை கடித்து மென்று சாட்ட்ரை உரிந்து உட்க்கொள்ளவேண்டும். துப்பிய சக்கையை கையில் வைத்து அழகு பார்த்து கொண்டிருக்க கூடாது. இதில் கரும்புக்கு சிலை, கரும்பு என்று தாளில் எழுதி கொள்வது, கரும்புக்கு விழா எடுப்பது என்று எண்ணற்ற குழப்பிடிகள். கருப்புதான் பாவம் காரணம் தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று அலுத்து கொண்டிருக்கும்….. செமினி எஸ்டேட்டில் உள்ள தமிழ் பள்ளியில் திருவள்ளுவருக்கு சிலை செய்திருக்கிறார்கள், 8 அடி உயரம். பார்க்க அய்யனார் போலிருக்கிறார்…. இப்பொழுது பாவம் அய்யனார் …..