இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். ‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.
கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சேரன் இலங்கை தமிழ்களை சாடி பேசியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பளர்களின் நிலைதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்..
பொலிஸாரும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறது . ஆனால் இதனை கண்டுகொள்ளவதில்லை .ஏனெனில் நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான்.
இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.
எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார்.
-http://www.tamilwin.com
“இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்” இது முட்ட்றிலும் உண்மை! பல தமிழ் படங்களை இப்போது படங்கள் வெளியாகி சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் (thirutthuVCD, runtamil,cooltamil,tamil gun,tamilrock……innum pala) வெளியிடுபவர்கள் இந்த புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களே இது 100% உண்மை!!!!