தற்போது இது ரொம்ப முக்கியமா? காவேரி பிரச்சனை குறித்து சிவகுமார் கோபம்

sivakumar_001தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். இவர் தற்போது காவேரி பிரச்சனை குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘தமிழகத்தில் பலரும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர், அதைவிட பல விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

கங்கை, காவேரி நதி இணைப்பு செய்யலாம், கிட்டத்தட்ட கங்கை நதியிலிருந்து 60% நீர் வீணாகிறது, இதெல்லாம் தான் நாட்டிற்கு முக்கியம்.

அதை செய்யாமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்புவது தான் தற்போது முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர்.

அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்’ என்று கோபமாக கூறியுள்ளார்.

-cinwwweulagam.com