றெக்க, ரெமோ என இரண்டு திரைப்படங்கள் நேற்று ( தேவியும்தான் ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை) திரையரங்குகளில்.
மக்கள் முட்டாள்கள் என நம்ப வேண்டும் … அவரகளை மேலும் முட்டாளாக்கினால் வெற்றி என நம்ப வேண்டும்..
ஆயிரம் பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்களுக்கு ஒரே குறைந்த விலை பொழுதுபோக்கு, திரைப்படம் காண முதல் நாள் தயாராவது என்பது போன்ற ஒரு போதையை நாடும் மனப்பான்மை இருக்கும் வரை ரெமோக்களும் றெக்கைகளும் கொடி கட்டிப் பறக்கும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கதை திரைக்கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் வசனம் பொளீர் என இருக்க வேண்டும் அல்லது நெஞ்சு நக்கி வகையில் இருக்க வேண்டும்.
காதல் என வந்து விட்டால் கண்டதையும் பேசலாம் கண்டபடி திரியலாம் .. அதிலும் இந்த மாதிரி சினிமா படங்களில் காதலிக்கும் பெண் சர்வ முட்டாளாக இருக்க வேண்டும் .. பைத்தியமாக இருக்க வேண்டும் .. சுய உணர்வு சுய கவுரவம் இதெல்லாம் இல்லாத மானம் கெட்ட ஜென்மமாக இருக்க வேண்டும்..
கதை நாயகன் யாரோ அவன் வயது, தோற்றம் அறிவு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவனைக் கட்டிப் பிடித்து காதல் நடிப்பைக் கொட்ட வேண்டும்.
சண்டைக் காட்சி என வந்து விட்டால் முதலில் தயாராவது ஒளிப்பதிவாளர்தான் .. பிரத்தியேக ஒளி வடிவமைத்து கோணம் பொருத்தி ஒண்ணும் இல்லாத சோணங்கி நாயகனின் உடல் அமைப்பை பிரும்மாண்டமாக காண்பிக்க வேண்டும்.. அடுத்து ஸ்டண்ட் இயக்குனர் … அடேங்கப்பா இவரிடம் கயிறு உள்ளது என்பதால் தூக்க முடியாமல் கால் தூக்கி பவர் இல்லாத கையை தூக்கினால் உடனே ஆறு ஏழு ஸ்டண்ட் நடிகர்கள் பறப்பார்கள். அடுத்து வருவது இசை அமைப்பாளர்… இவரது பின்னணி இசையில் கதை நாயகன் காண்டா மிருகமாகி விடுவான் …. இசையாலேயே அடிக்கும் வித்தை தெரிந்த மகான் இவர்.
நடிகனுக்கு என்ன சூப்பர் சம்பளம், கவனிப்புகள் மற்றும் கதையில் ,வசனங்களில் மூக்கை நுழைத்து மாற்ற்ம் செய்யும் அதிகாரம். இப்படித்தான் இருக்கிறது தமிழ் சினிமா… முன்னேறுமா இனி நிஜமா?
தமிழ் கற்றால் சட்டிப்பானை கழுவும் வேலைதான் கிடைக்கும் என்று கன்னடதெலுங்கர் பெரியவா ராமசாமி நாய்க்கர் சொன்னாப்பில!
தமிழ் கற்றால் சட்டிப்பானை கழுவும் வேலைதான் கிடைக்கும் என்று தெலுங்கு பிராமணர் சோ என்கிற இன்னுமொரு ராமசாமியும் சொன்னாக!
தமிழ் கற்றால் தமிழ்நாட்டு தமிழனுக்கு சட்டிப்பானை கழுவும் வேலைதான் கிடைக்கும் என்று கூறியிருக்க வேண்டும் அதுதான் உண்மை நிலை …தமிழில் பொறியியல் நிபுணர் பட்டம்பெற்ற தமிழ் குடியில் பிறந்த ஒரு தமிழக தம்பி தலைநகரில் உண்மையில் மங்குதான் கழுவுகிறான் ! ராமசாமிக்கள் அன்று கூறியது தமிழ் பிள்ளைகளுக்காகத்தான் என்பது இன்று நாம் கண்கூடாக பார்க்கிறோம் ..
உண்மையில் பல தெலுங்கு இன மக்களுக்கு தமிழ்மொழி பணம் புகழ் அனைத்தையும் கொடுத்தது மட்டுமில்லாமல் நாடே கொடுக்கும் என்பதை நாம் பிரிட்டிஷ் ஆட்ச்சிக்கு பிறகு கண்கூடாக பார்க்கிறோம் ..தெலுங்கு தம்பிங்க தமிழில் மிக அருமையாக நடிக்கிறார்கள் ..விஷால்,ஜெயம்ரவி,தனுஷ் ,விஜய்சேதுபதி ,சிவகார்த்திகேயன் அண்மைக்காலமாக இங்கு இவர்களின் திரைப்படங்களே மாறிமாறி திரையரங்கை ஆக்கிரமித்துள்ளதென்றால் பார்த்துக்கோங்க மக்களே ..உண்மையிலேயே தெலுங்கு மக்கள் ஒற்றுமையாகவும் கடின உழைப்பாலும் உயர்ந்து நிக்கின்றார்கள் .பல இந்திய மாநிலங்கள் பல நாடுகளிலும் வணிகமானாலும், சினிமா ,ஆன்மிகம் ,அரசியல் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளனர் குறிப்பாக இலங்கை முழு அதிகாரமும் அவர்களின் கையில் ..ஏன் இன்றய தமிழகம் ? பாண்டிசேரி ,இன உணர்வற்று தன்னையறியா தமிழர்களை விட பன்மடங்கு திறமையும் சாணக்கியமும் உள்ளவர்கள் தெலுங்கு மக்கள் என்பதை யார் என்னசொன்னாலும் பாராட்டியே ஆகவேண்டும்
தமிழர் எழுச்சிப்பறைக்கு, ஏன் தெலுங்கர்களின் மேல் அப்படி ஒரு கோபம். அவர்கள் உழைக்கிறார்கள் நன்றாக உழைக்கிறார்கள் அதில் தவறு இல்லையே. இதைதான் திரு. சீமான் கேட்கிறார் அதாவது தெலுங்கன், மலையாளி, கன்னடம் அவரவர் பாட்டுக்கு இருங்கள் தமிழ்நட்டை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று. ஆனால் தமிழன் நாம் என்ன சொல்கிறோம். சீமான் ஒரு சுயநலவாதி. படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை அதுதான் அரசியலில் புகுந்து இருக்கிறான் என்று நாம் சொல்கிறோம். இதற்கு என்ன சொல்வது. இன்று திரு. ஒ.கே. பன்னிர்செல்வம் ஒரு தமிழன் என்று நினைக்கிறன் முதலமைச்சர் பதவி கையில் இன்று இருகிறது. எதுவும் செய்யலாமே செய்வான இவன். இருப்பினும் இவன் அம்மா காலில் விழுந்து விழுந்து தன் உடம்பை ஒரு நல்ல நிலைக்கு வைத்து இருக்கிறன். நாம் தமிழன் என்று பெருமை படலம் ஆனால் தமிழ்நட்டை தமிழன் உருப்பட வைக்க மாட்டான்கள்
இந்த உலகம் தனி மனிதனுக்காகவோ, சமூகத்துக்காகவோ, இனத்துக்காகவோ உருவானதல்ல. இது ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பம், இதில் தமிழனும் இருக்கிறான் சீனன் , ஜப்பான்காரன் , ஆசியாக்காரன், ஐரோப்பாக்காரன் என பல்லினத்தவனும் வாழ்கிறான். எல்லோரும் வாழ்கிறார்கள், வாழ வைக்கிறார்கள், நமது முன்னோர்களும் வரலாறு மெச்சும்படி வாழ்ந்து தடம் பதித்துச்சென்றுள்ளனர்.
இப்போது என்ன வந்தது ? நாம் மட்டும் ஏன் அது குறை இது குறை என பிறரை தாழ்த்திப்பேசும் அவல நிலையிலேயே இன்னமும் உழல்கிறோம் எனும் உண்மை புரியவில்லை.
நம் வாழ்வு நம் கையில், நம் சிந்தனை, செயல்பாடுகளே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. நம் வாழ்வில் பிறரால் தவறு நேர்கிறது என்றால் அது நாம் அனுமதிப்பதால் தானே?
இந்தியத் தமிழர்களை தகரத் தமிழர்கள் என்று சிலர் வெறுப்பை உமிழ்வதை காணும்போது வேதனையாக இருக்கிறது, நாம் என்ன இங்கே தங்கத் தமிழர்களாகவா ஜொலித்துக்கொண்டிருக்கிறோம்?
நம் நிலை என்ன ? நமது பொருளாதார பலம் என்ன ? நம் பிள்ளைகளின் கல்வி நிலை என்ன ? இந்நாட்டில் நமது சந்ததியினரின் எதிர்காலம் என்ன ? அது நமக்கு முக்கியமில்லையா ?
இந்தியத் தமிழர்கள் புத்திசாலிகள் அவர்கள் காசுக்கு ஓட்டை விற்பவர்கள். சினிமாவில் கூட ரசிகர் மன்றம் அமைத்து ஹீரோவிடமே பணத்தைப் பிடுங்கி அவனுக்கே பாலாபிக்ஷேகம் செய்து மீதத்தை ஆட்டை போடுபவர்கள், திறமைசாலிகள் ஆனால் நாம் ?
முதலில் நமக்கு இங்கே தேவை ஒற்றுமை, அன்பும், மரியாதையும் கூடவே நிறைய நன்றி போன்ற நேர்மறை சக்திகள்.
தமிழர்களும் நல்ல உழைப்பாளிகளே. என்ன, தலைவனை தேர்ந்து எடுப்பதில் தவறு செய்து விடுகிறார்கள். அதனால் என்னவோ எப்போதும் துன்பக் கடலில் வீழ்ந்து தத்தளித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள நம் தமிழர்களில் பல வெத்து வேட்டுகள் கோடி பிடித்து வந்து விடுகின்றனர். நம்மில் சிலரும் அவர்களையே தலைவன் என்று கூறி கொண்டு தடம் புரண்டு செல்கின்றனர்.
“சீமான் ஒரு சுயநலவாதி. படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. அது தான் அரசியலில் புகுந்து இருக்கிறான் ” என்று தமிழன் சொல்லவில்லை நண்பரே! அதனைச் சொல்லுபவன் தமிழன் அல்லாதவன்! தமிழனைக் குழுப்புவதற்கு எப்போதுமே இப்படி ஒரு கும்பல்!
ஆபிரகாம் டேரா நீங்களுமா?