புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள், தாயகத்து தமிழ் மக்கள் மற்றும் தமிழகத்து மக்கள் அனைவரினதும் தமிழீழ கனவை நிஐமாக்கி காட்சியாக்கப்பட்ட கூட்டாளி எனும் தமிழ் தாயக திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் கனவை நிஐமாக்கும் வகையில் தத்ருபமாக அமைக்கப்பட்ட காட்சிகள் நிரம்பிய திரைப்படமாகும்.
ஈழத்து கலைஞர் இயக்குனர் நிரோஐனின் தயாரிப்பில் உருவான கூட்டாளி எனும் தாயகத்து செய்திகளை கூறும் தமிழ் திரைப்படம் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே மண்ணில் திரையிடப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து எதிர்வரும் டென்மார்க்கில் 14, 15 மற்றும் 22ம் திகதியும் சுவிட்சர்லாந்தில் 16, 23 திகதியும் நோர்வேயில் 16ம் திகதியும் திரையிடப்படுகிறது.
தாயக செய்திகளை கண்ணெதிரில் காட்டும் இந்த திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டாளி திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வில் திரையிடப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com
மலேசியாவில் தாமரை குரூப்பு தியேட்டர்கள் இன்னும் இதர சினிமா விநியோகஸ்தரர்களான கபாலி மாலிக் / GSC / லோட்டஸ் FIVE STAR இவர்களெல்லாம் தமிழன் இல்லையா ? தமிழன் ரசிகர் கூட்டம் மட்டும் மந்தைகள் போல பூருது….பூறுது ?
காதல் மன்னன் ..ரெமோ போல நிச்சியம் பண்ண பொண்ண விரட்டி மண்டைய கழுவி பெண் புள்ளளைகளை குழப்பி காதல் கீதல் என்று காதலை நடுத்தெருவுக்கு கொண்டுபோற படமெல்லாம் சமுதாயத்தை துப்புது. அதுவெல்லாம் விநியோகஸ்தரர்களை தரகராக்கி சமுதாயத்து மூளையை குப்பையாக்கி இலக்கியம் பேசுது ! கெடுவான் கேடு நினைப்பான் தமிழ் என்றும் நின்றுதான் கொல்லும் அவ்லோ பொறுமைசாலிங்கோ ! எத்தனை படக்கம்பெனிய பார்த்து விட்டோம் ? கபாலி !!!! லிங்கா !!!! பாபபா !!!