500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை பற்றி இளையதளபதி விஜய் நேற்று பேசியதை மக்கள் வரவேற்றாலும், அதை கேட்டு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன. 20 சதவீதம் பேர் செய்யும் தவறுகளுக்காக 80 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுருந்தார்.
‘அவ்வளவு கவலைப்பட்டால் அவரே தெருவில் இறங்கி மக்களுக்கு உதவலாமே’ என மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறி, விஜய் ரசிகர்களிடம் சிக்கி கொண்டார். பின்னர் அதே கட்சியில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு வந்துள்ளதாகவும் செய்திகள் வந்தது.
இது ஒருபுறமிருக்க, தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “விஜய் சொன்ன புள்ளி விவரங்கள் முற்றிலும் தவறு” என கூறியுள்ளார்.
“விஜய் சொன்னது போல் 20 சதவீதம் பேர் பணத்தை பதுக்கவில்லை. இந்தியாவில் இந்த தவறை செய்பவர்கள் மிக மிகக் குறைவு. 10% கீழ் தான் இதனை செய்கிறார்கள், அதில் 5% பேர் மட்டுமே அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்” என கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
விஜய் சொன்னது தவறு. ஸ்ரீலங்காவின் முன்னாள் அதிபர் ராஜ பக்க்ஷே உடைய லைக்கா நிறுவனத்திற்காக ‘கத்தி’ படம் நடித்ததிற்கு முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும் இந்த அறிவுக்கொழுந்து விஜய்! அதையே விஜய் செய்யல, தெரியாத மாதிரி இருந்தாரு …..நாமும் பெரிய மனதுடன் மன்னித்தோம்…. இப்ப யாரு கூப்பிடது இவரை கருத்து சொல்ல ? சூறாவளி அடிக்கும் பொழுது: பூ பிஞ்சு இல்லை காய் கனி வேறு மரம் என்று பேதம் பார்த்து அடிக்காது. எனவே கருப்பு பணத்தை சுத்தம் செய்ய புயல் அடிக்கும் பொழுது , இவருடைய கருப்பு பணம் பாதுகாக்க பட வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் ?
இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறார்.
புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?ரஜினி போன்று பாலிவுட் முதலைகள் பலரும் மோடியை ஆதரித்திருக்கின்றனர். அங்கும் இதே நிலைதான். சினிமாவில் கருப்பு பணத்தை நம்பி வாழ்பவர்கள்தான் சினிமா கதைகளில் ஊழலை எதிர்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் அதானி குழுமத்தால் முன்னிறுத்தப்படும் மோடியும் கருப்புப் பண ஒழிப்பை பேசுகிறார். இப்படி கேட்பவர் நடிகர் இயக்குனர் அமீர்….. எங்கே வரி ஏயிப்பில் மாடி கொள்வோம் என்று மோடியிடம் காலில் விழுந்த ரஜினி நடித்த எந்திரன் 2 . தயாரிப்பது யார் தெரியுமா ,, அதே லைக்கா நிறுவனம்தான் . ரஜினியை மன்னிப்பு கேட்க சொல்லேன் பார்ப்போம். உன் வீரம் தமிழனிடம் தான் .. அறிவு கொழுப்பு
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? விஜயின் புள்ளிவிபரத்தில் ஒரு தவறு நடந்திருக்கிறது! அவர் என்ன அரசியல்வாதியா சரியாகச் சொல்ல! அது தான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாண்டியன் சரியான புள்ளிவிபரத்தைச் சொல்லிவிட்டாரே! என்ன செய்வது? அந்த 5 விழுக்காடு பணக்காரர்களால் 95 விழுக்காடு மக்கள் அவதிப்படுகின்றனர்! ஆனால் அவதிப்படுபவர்களில் சினிமாக்காரர்களை சேர்க்க வேண்டாம்! இவர்களும் திருடர்கள்தான்!