கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை இழக்கச் செய்ய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பத்து கல்பனகள் என்ற மலையாள படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார்.
அந்த படம் விரைவில் வெளியாக இருப்பதையொட்டி கொச்சியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
பாலியல் தொடர்பான குற்றங்கலில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மையை நீக்கம் செய்ய வேண்டும், அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை என தெரிவித்தார்.
அப்படி செய்தால் பின்னர் அவர்கள் பெண்களை தொடவே மாட்டார்கள் என்றும் நடிகை மீரா ஜாஸ்மின் கூறி உள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் கற்பழிப்பு குற்றங்களை தடுக்க போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது அவருடன் நடிகர் அனூப் மேனன், பெரும்பாவூர் என்ற இடத்தில் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஜிஷா என்ற பெண்ணின் தாயார் ஆகியோர் உடன் இருந்தனர்.
-http://news.lankasri.com
கொலைக்கு கொலை தீர்வாகாது. பெண்கள் அனைவருக்கும் திருமணத்திற்கு முன் கட்டாய கன்னி தன்மை பரிசோதனை என்றால் தாங்குமா உலகம் ? பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் !
மீரா ஜாஸ்மின், உங்கள் கருத்து சரிதான். நடப்புக்கு வரவேண்டும் என்பதே எனது கருத்தும் கூட.