பிரபல நடிகரும், எழுத்தாளருமான சோ ராமசாமி இன்று உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது புகழ் பெற்ற ஒருவராவார்.
மேலும், சோ ராமசாமி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் என்பதேடு, அவரின் சிறந்த ஆலோசகாக இருந்து வந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில், சோ ராமசாமி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
அரசியல் நகைச்சுவை என்றால் அதனை மறைந்த நடிகர் சோ மூலமாகத்தான் கேட்க வேண்டும். எம் தகப்பனார் காலத்தில் இவர் வயலில் இறங்கி வேலை செய்ததையும் பார்த்ததாக கூறுவார். சகலகலா வல்லவன் சோ நம் நினைவில் என்றென்றும் வாழ்வார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும். சிவசிவ.
அரசியலை நகைச்சுவையாக சொன்னவர். ஒரு மிக பெரிய அரசியல் சாணக்கியன் என்றால் தவறொன்றும் இல்லை. என்னை கவர்ந்தவர், குரு போன்றவர். இவரின் துக்ளக் படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் …. வியந்திருக்கிறேன் …. 50 ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் விஷயத்தை ஆண்ட்ரே சொல்லி விட்டார். அந்த படத்தில் அவர் பிரதம மந்திரியாக இருக்கும் தருணத்தில், கேபினெட் மீட்டிங்கில் பேசுவார். வேலையில்லா திண்டாடடத்தை எப்படி போக்குவது என்று ஒரு அமைச்சர் கேள்வி கேட்பர். இவர் உடனே: “வேலையில்லாதவர்களுக்கு நான் எப்பொழுதோ அமைச்சர் வேலை கொடுத்து விட்டேன் என்பார்”. அதாவது அந்த பாரத பெரும் கண்டத்தில் அமைச்சர்களுக்கு கூட வேலை இல்லை என்பதனை நாசுக்காக சுட்டி காட்டுவார். ஒவ்வொரு மாதமும் ஒரு மொழி மாதமாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்பார் ….. கட்சி விட்டு கட்சி தாவாமல் இருக்க 350 பார்லிமென் மெம்பர்களுக்கும் துணை பிரதம மந்திரி பதவி கொடுப்பார் பாருங்களேன் ….. சிரித்து சிரித்து என் கண்ணே கலங்கி விட்ட்து ….. அற்புதம் அற்புதம் ….. அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்……. நூறாண்டு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இவர் !