அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?

[கா. கலைமணி – [email protected]]

1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் (TENOM PANGI HYDRO POWER PROJECT) நான் வேலை செய்துக் கொண்டிருந்த நேரம். நம் நாட்டுத் தமிழர்களுக்கு அடுத்த நிலையில் பிலிப்பினோவிலுள்ள மொரோ தீவிலுள்ளவர்களும் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) அடுத்தது இந்தோனேசியாவிலுள்ள தீமோர் தீவுகளிலுள்ளவர்களும் (கிருஸ்துவர்கள்) சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஜப்பானியர்களோடு வேலை செய்து வந்தோம்.

எனக்கு உதவியாளனாக வேலை செய்து வந்த பிலிப்பின்காரன் (20 வயது) ஒரு மாத விடுமுறையில் சென்றவன் மலேசிய குடியுரிமையோடு மீண்டும் வேலையில் சேர்ந்துக் கொண்டான். அதற்கு முன்னால் அவனிடம் சிகப்பு அடையாள அட்டைக் கூடக் கிடையாது. அப்பொழுதே குறிப்பிட்ட விலையில் கள்ளத் தனமாக மலேசியக் குடியுரிமை வினியோகிக்கப்பட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் அதைப் பற்றி அந்தக் காலக் கட்டத்தில் நான் பெரிதுப்படுத்திக் கொள்ளவில்லை கள்ளக் குடியேரிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் போனபோது, பிரதமரிலிருந்து மந்திரிகள் வரை இந்தோனேசியாவிற்குச் சென்று, கள்வர்களை நல்லவர்களாக ஏற்றுக் கொண்டு சான்றிதழ் வழங்கியதையும் நாம் மறுப்பதற்கில்லை.

கிழக்கு மலேசியாவில் பிலிபினோக்களும், மேற்கு மலேசியாவில் இந்தோனேசியர்களும் பின் வழியாக வந்து இன்று பலத் துறைகளில் தங்களின் ஆதிக்கத்தை செழுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருக்கும் நம்மவர்களில் பலருக்கு இன்று வரைத் திட்டமிட்டே குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

நிலமை இப்படி இருக்கையில்….

ஒவ்வொரு நாட்டிற்கும் குடிநுழைவுக் கட்டுப்பாடு உண்டு. அனுமதியின்றி நுழைந்தால் கடுமையான தண்டனையும் உண்டு. சில நாடுகளில் எந்த விதமான தண்டனை என்றுப் பார்ப்போம்.

வடகொரியாவில் 12 வருடங்களுக்கு அடிமட்டத் தொழிலாளியாகக் கடுமையாக உழைக்க வேண்டும். உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்க அனுமதியில்லை.

ஈரானில் காலவரையின்றி தடுப்புக் காவல். நாட்டை உளவுப் பார்க்க வந்ததாக எண்ணி பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாவதுண்டு.

ஆப்கானிஸ்த்தானில் கேள்வியின்றியே சுட்டுக் கொல்லப் படுவர்.

சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட வருடங்களுக்கு சிறை தண்டனை.

சீனாவில் பிடிபட்டவரின் தகவல் கடைசிவரைத் தெரியாமல் போகும். தூதரகமும் ஒன்றும் செய்ய முடியாமல் மௌனமாகும்

வெனிசுவாலாவில் சம்பந்தப் பட்டவரை அயல் நாட்டின் உளவாளி என்று முத்திரைக் குத்தப்பட்டு, உள்நாட்டிலேயே முடக்கிவிடுவார்கள்.

கியூபாவில் அரசியல் கைதியாக்கி, சிறைச் சாலையில் உறுக்கியெடுத்து ஒன்றுக்கும் உதவாததாக ஆக்கிவிடுவார்கள்.

பிரிட்டனில் கைது செய்யப் பட்டால், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டித்து, விடுதலை செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பிவைப்பார்கள்.

இந்தோனேசியாவில் பிடிபட்டால், மூன்று வருட சிறைத் தண்டனையும் பதினைந்து மில்லியன் ரூப்பியா தண்டமும் கட்டவேண்டும்.

ஆனால் இந்தோனேசியர்கள் (முஸ்லிம்கள்) மலேசியாவில் திருட்டுத்தனமாக நுழைந்தால்

1) நிரந்தர குடியிருப்பாளர் தகுதி அல்லது குடியுரிமை வழங்கப்படும்
2) வாகனமோட்டும் உரிமம் கிடைக்கும்
3) வேலை வாய்ப்புக்கள் ஒதுக்கப்படும்
4) பூமிபுத்திரா சலுகைகளும் கிடைக்கும்
5) தொழில்நுட்பக் கல்வி இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும்.
6) மகிழ்வுந்து மற்றும் வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும்.
7) கடன் அட்டையும் கிடைக்கும்
8) இலவச மருத்துவ வசதி
9) இலவச கல்வி நிச்சயமாக உண்டு
10) நேரடியாகக அரசாங்கக் குத்தகைகள் கொடுக்கப் படும்
11) அரசாங்க உத்தியோகத்தோடு, பதவி உயர்வும் உண்டு
12) எந்த உரிமமும் இல்லாமல் வெளிப்படையாகவே பொருட்களை விற்கலாம்.
13) அமச்சராகவும் வரலாம், பிரதமராகவும் ஆகலாம்

இது போலவே பிலிப்பினிலிருந்து சபாவுக்கு நுழையும் குறிப்பிட்ட மதத்தினருக்கு இது போன்ற சலுகைகள் உண்டு. இவர்களுக்காக மலேசிய அரசாங்கம் உருவாக்கிய பிலிப்பினோ மார்கெட் என்பது கோத்தாகின்னபாலுவில் மிகவும் பிரபலம். மீன் பிடிப்பு, காய்கறி வியாபாரம், சிறு கடைகள் இன்னும் இவர்களின் ஆதிக்கம். கிழக்குக் கடற்கரையை ஒட்டியுள்ள மலேசியாவுக்கு சொந்தமான சிலத் தீவுகள் இன்னும் பிலிப்பினோக்களின் கட்டுப் பாட்டில் தான் இருக்கின்றது.

உண்மையிலேயே மலேசியா சொர்க்க பூமிதான்.

ஆனால் யாருக்கு?

நாம் தான் தூர நோக்குச் சிந்தனையின்றி யார் யார் கால்களையோ நக்கிக் கொண்டு இருக்கின்றோம்.

TAGS: