அமராவதி ஆற்றுக்கு நேர்ந்த கொடுமையைப் பேசும் ‘அச்சமில்லை அச்சமில்லை’!

ameer-directorதன் உதவி இயக்குநர் முத்துகோபால் இயக்கியுள்ள படத்தை வாங்கி தன் சொந்த பேனரில் வெளியிடுகிறார் இயக்குநர் அமீர்.

முத்து கோபால், இயக்குநர் அமீரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவர். தற்போது இவர் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோகவும் நடித்துள்ளார்.

ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள சாயப் பட்டறை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலந்து அதன் மூலம் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகள், திருப்பூர், பொள்ளாச்சி, பகுதி மக்கள் எந்த அளவிற்கு சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கதை.

படத்தை சொந்தமாக தயாரித்த முத்து கோபாலுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படவே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தனது குரு அமீரிடம் வந்துள்ளார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த படத்தைப் பார்த்த அமீர், படத்தின் நேர்த்தி, கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தானே வாங்கிக் கொண்டார்.

படத்திற்கு முத்து கோபால் வைத்திருந்த பெயரை மாற்றி ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தலைப்பைச் சூட்டியுள்ளார். “இந்த மாதிரி சமூக பிரச்சினைகளை பேசும் படங்களிைத்தான் இனி நடிப்பது, தயாரிப்பது, இயக்குவது என முடிவு செய்துள்ளேன்.

முத்து கோபாலின் படத்தைப் பார்த்ததும் அதன் சமூக நோக்கம் பிடித்த்திருந்தது. அதனால் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்,” என்ற அமீர், இந்தப் படத்தில் ஒரு கெளரவ வேடத்தில் தோன்றுகிறார்.

அச்சமில்லை அச்சமில்லை 1984-ல் கே பாலச்சந்தர் இயக்கிய படம். தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெற்ற முக்கியமான அரசியல் படம். பாலச்சந்தர் குடும்பத்தினரின் அனுமதியுடன் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் அமீர்.

இந்தப் படத்தை படமாக்கும்போது, ஏகப்பட்ட மிரட்டல்கள், தொந்திரவுகள் வந்தனவாம் படக்குழுவினருக்கு. ஆனால் அஞ்சாமல் மனதில் நினைத்ததைப் படமாக்கியுள்ளாராம் இயக்குநர் முத்துகோபால்.

tamil.filmibeat.com