கடந்த மாதம் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம், இந்தியவே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த சம்பவமாக அமைந்ததோடு. இன்றைய மாணவர்கள் தமிழ் உணர்வு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது இல்லை என்ற எண்ணத்தையும் பொய்யாக்கியது. இந்த போராட்டத்திற்கு கமல்ஹாசன், சூர்யா, விஜய், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் பாப் தமிழா, ராகவா லாரன்ஸ் போன்ற கோலிவுட் நட்சாத்திரங்கள் ஆதரவு தெரிவித்ததோடு சிலர் மாணவர்களுடன் களத்திலும் இறங்கி குரல் கொடுத்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தற்போது நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி கோலிவுட்டில் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் முதல் படமாக நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் அமீர், நடிகர் ஆர்யாவை வைத்து ‘சந்தன தேவன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதைக் களமே ஜல்லிக்கட்டை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. இது தவிர ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘கருப்பன்’ படத்திலும், நடிகர் ஆரி மற்றும் தன்ஷிகா நடிக்கும் வெவ்வேறு படங்களிலும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி சில காட்சிகள் உருவாக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-nakkheeran.in