நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நெடுவாசல் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு, தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விவசாய பூமியில் தான் மீத்தேனை எடுக்க முடியுமா என்ன?
ஆய்வுப்படி குப்பைக் கிடங்கு, ரசாயன ஆலை கழிவு, மாட்டு சாணம், விவசாயக் கழிவு, காய்ந்த மரங்கள், ஈசல் புற்று, எறும்பு புற்று ஆகியவற்றின் மூலம் 85 சதவீதம் மீத்தேன் எடுக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் 12 சதவீதம் மட்டுமே மீத்தேன் கிடைக்கும் நிலையில் விளை நிலங்களை குறிவைப்பது எதற்காக? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
– manithan.com