சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றாமல் போனது இந்த தமிழக அரசு.
எண்ணூர் கடலில் எண்ணெய் கொட்டியது. அதனை முறையாக எடுக்க முடியாமல் வாளியில் அள்ளிக் கொட்டியது அரசு.
நெடுவாசலில் ஒரு பிரச்சனை என்றால் இந்த அரசு எப்படி சமாளிக்கும். அந்த அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதன் மூலம் சோலைவனமான இந்த பூமி பாலைவனமாக மாறிவிடும்.
இப்படி ஆரம்பித்த சின்ன போராட்டம் இன்று மாணவர்கள் கைக்கு போய் விட்டது. இனி ஒன்றுமே செய்ய இயலாது.
அரசுகள் பயந்து திட்டத்தை கைவிட்டே ஆகவேண்டிய சூழ்நிலை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் லட்ச கணக்கில் திரண்டார்கள்
நடிகர் ராகவா லாரன்ஸ் அனைவருக்கும சோறு போட்டார் ஆனால் சொல்லிக் காட்டினார்..குத்திக் காட்டினார்.
இது மாணவர்களுக்கு பெரும் அவமானமாக இருந்தது. நெடுவாசல் மக்கள் எங்க பிழைகளுக்கு எந்த நடிகனும் சோறு போடக் கூடாது என்று முடிவெடுத்தார்கள் .
பெரும் அண்டாக்களில் சோறு, சுவையான கோழிக்கறி குழம்பு, சாம்பார், ரசம், மோர் என அசத்த ஆரம்பித்து விட்டனர்.
தாய்மார்களே பரிமாறவும் செய்கின்றனர். கொஞ்சமாக சாப்பிடும் மாணவர்களை உரிமையோடு திட்டி மேலும் சோறு போடுகின்றனர்.
இது மாணவர்களை நெகிழச்செய்து விட்டது. நெடுவாசலை காப்பாற்றிவிட்டுத் தான் போவோம் ஆத்தா என்கிறார்கள் மாணவச் செல்வங்கள்.
-http://newstig.com
இது தமிழின ஒற்றுமையின் பலம் .