சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தலைவர்களை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றி தனது நிலைப்பாட்டினை பரிந்து கொண்டார்.
அப்போது அவர், சாதி அவசியமில்லை என்றும் சாதியை எடுத்துவிடுவதுதான் தனது கொள்கை என்றும் கூறினார். சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் மட்டுமே தான் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியாது என்றும் கூறினார். தமிழகத்தில் தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும் என்றார்.
ஆட்சி தொடர வேண்டுமா?
தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன் என்றும் கூறினார். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
புதிய தலைவர் தேவை
புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் என்றும் கமல் தெரிவித்தார். நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்றும் கமல் தெரிவித்தார். எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்றும் பிரதமரும், முதல்வரும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கருவி போன்றவர்கள் என்றும் கமல் தெரிவித்தார்.
நாட்டை விட்டு போகிறேன்
எனது விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்களால் பிரச்சினை வரவில்லை. அப்போது இருந்து ஆட்சியாளர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். எனது படத்திற்கு வந்த பிரச்சினைக்கு அரசியல்தான் காரணம். விஸ்வரூபம் படத்திற்கும், விரும்மாண்டி படத்திற்கும் அரசியல் கட்சிகளால்தான் பிரச்சினை வந்தது என்றும் அதனால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறினார். இந்த போராட்டத்தில் தான் தோற்றுப்போனது உண்மைதான் என்றார். அப்போது தான் நாட்டை விட்டுப்போவதாக தெரிவித்தேன் என்றும் கமல் கூறினார்.
பகுத்தறிவுவாதி தான்
பகுத்தறிவுவாதிதான் என்றும் பல ஆண்டுகளாக நாத்திகம் பேசி வருவதாகவும் கூறினார் கமல் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான் என்றும் தெரிவித்தார்.
நான் குரல் கொடுப்பேன்
நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். வாக்குகளுக்கு விலைபோகும் போது கேள்வி கேட்க முடியாது என்றும் கமல் தெரிவித்தார். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வெறும் கலைஞனாக மட்டுமே தன்னால் இருக்கமுடியாது என்றும் கூறினார்.
உடனடியாக என்றால் நாளைக்கா அல்லது நாளை மறுநாளா? யோவ் போய் உமது சோலிய பாருமய்யா…
மிஸ்டர் ஜோக்கர் அவர்களே- அவர் தமிழ் நாட்டின் ஒரு பிரஜை– அவருக்கு நாட்டின் நிலை பற்றி கூற உரிமை இருக்கிறது– அவருக்கு நடிப்பது மட்டும் சொல்லி அல்ல. தயவு செய்து சிறிது சிந்தியுங்கள். ராமன் ஆண்டாள் என்ன ராவணன் ஆண்டாள் என்ன என்று இருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் நிலைக்கு தகுந்த அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
சோலி
என் தாய் தமிழ் அவர்களே…நல்ல ‘சுருக்’ கொடுத்தீர்கள்…நீங்கள் சொன்னதை ‘தயவுடன்’ சுமார் 10-மணி நேரம் சிந்தித்துப் பார்த்தேன்.
திரு. கமல் இப்போதுதான் (அதாவது அண்மைய காலமாகத்தான்) இத்தகைய ‘கருத்துக்களை’ சொல்லி வருகிறார். நீங்கள் சொன்னது போல அவர் ஒரு இந்திய பிரஜை…ஒருவேளை அண்மைய காலமாக்த்தான் அவர் ஓர் இந்திய பிரஜையோ?
ராமன் ஆண்டாள் (ஆண்டால்) என்ன ராவணன் ஆண்டாள் (ஆண்டால்) என்ன என்று இருப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது. உண்மைதான். ஆனால் ஒரு சிறு சந்தேகம் எனக்கு. இவ்வளவு காலமாக ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தானே இருந்தார். ஒருவேளை இப்போதுதான் பகுத்தறிவாளராக கமல் ‘புது’ விஸ்வரூபம் எடுத்திருப்பாரோ?
சொன்னாலும் குத்துமட சொல்லாவிட்டால் குத்தமடா? நம் இனம் எப்போது மாறபோகிறது என்று தெரியவில்லை. கமலஹாசன் தனது கருத்துக்களை கூற அவருக்கு உரிமை உள்ளது. அவர் ஏன் அன்று கேட்கவில்லை இன்று கேட்கிறார் என்று கேட்பது தவறு. அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. தமிழ் நாட்டில் அரசியல் பிரச்னையால் பாதிப்புக்கு ஆளானவர்கள் நம் தமிழர்கள் . அந்த பிரச்சனையை களைய அவரது கருது மறுதேர்தல் வைப்பதே சிறந்தது என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருது.
கமல் ஹாசன் சரியாகத்தான் சொன்னார். தவறு சொல்ல என்ன இருக்கிறது? தமிழன் மட்டும் அல்ல மேலிடத்தில் மோடியாக இருந்தாலும் நடிகர்களுக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!
ஒருவேளை கமல் காசனால் தாங்க முடியவில்லை என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை– எனக்கும் ஒரு ஒற்றுமை– நான் பல தேர்தலில் வாக்களிக்க வில்லை- முதலாவதாக கடந்த தேர்தலில் வாக்களித்தேன்– யாரும் அவரின் விருப்பத்திற்கு செயல் பட முடியும்– யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்பது எனது கருத்து.