தமிழ் சினிமாக்களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. புது புது கலைஞர்கள் அனைத்து துறைகளிலும் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். வருடம் முழுக்க வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டிவருகிறது.
பலரும் சினிமாவில் இப்போது ஆரோக்கியமான வியாபாரம் இல்லை என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் வழக்க போல பெரிய பட்ஜெட் படங்கள், டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சிறு பட்ஜெட், புதுமுக இயக்குனர்களின் படங்களில் ஒரு சிலவற்றிற்கு மட்டும் தான் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. முக்கால் சதவீத படங்களின் நிலை மிகவும் பரிதாபம் தான்.
இவ்வளவு சூழ்நிலையிலும் புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் எடுத்த துருவங்கள் 16 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரீமேக் உரிமங்களும், சாட்டிலைட், டிஜிட்டம் உரிமங்களும் விற்றுவட்டது.
இதனால் பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
-cineulagam.com