உண்மையாகவே ரூ 100 கோடி படங்களே தமிழில் இல்லை- வெளிவந்த அதிர்ச்சி தகவல்

tamil cinemaதமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது தரமான படங்கள் களம் இறங்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுப்பக்கம் ரூ 100 கோடி கிளப் என்பது கௌரவமாகிவிட்டது.

இதில் குறிப்பாக மாட்டிக்கொண்டு முழிப்பது ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா தான், இவர்கள் படங்கள் ரிலிஸானாலே ரூ 100 கோடி வசூலை எத்தனை நாளில் கடந்தது என்பது தான் முதல் கேள்வி.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தமிழ் படங்கள் பல ரூ 100 கோடியை கடந்துள்ளதாம், ஆனால், தெலுங்கு, ஹிந்தி படங்களை போல் தயாரிப்பாளர்களுக்கு இன்னும் ஒரு தமிழ் படம் கூட ரூ 100 கோடி வசூலை கொடுத்தது இல்லையாம்.

இது தான் உண்மை நிலவரம் என சினிமா வல்லுனர், தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.cineulagam.com