சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கங்கை அமரன் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி ஆவார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கும் சசிகலா தரப்பு அதிமுகவுக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை எடுத்துக்காட்டவுள்ள தேர்தல் என்பதால் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்த இடைத்தேர்தலில் களம் காணவுள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சசிகலா அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் தீபா போட்டியிடுகின்றனர்..
இந்நிலையில் பாஜக சார்பில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேர்தல் குழு தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 18ல் பிறந்தவர் கங்கை அமரன். கங்கை அமரன், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜகவில் இணைந்ததார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் தம்பி தான் கங்கை அமரன்.
மீண்டும் சினிமாக்காரனா? ………..
கஷ்டம் தான்! ஆனால் மன்னார்குடியால் பாதிக்கப்படடவர்! அதனால் திட்டோ திட்டு என்று திட்டுவதற்கு ஒரு வாய்ப்பு! அவ்வளவு தான்!
ஆக தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்புக்கு பழி வாங்க அரசியலை பயன்படுத்துவதா? தேன் எடுத்தவன் கண்டிப்பாக புறங்கையை நக்குவான். மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்ததும் தனது பழிவாங்கும் காரியத்தில் கண்ணாயிருந்து தான் இழந்ததை மீட்பதிலேதான் குறியாக இருப்பார். மக்களுக்கு சேவை எப்போது? அரசியல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? தனது தேவைக்கு மேல் பல ஆயிரம் மடங்கு செல்வம் எதற்கு? அதுவும் நேர்மையற்ற முறையில் தேடுவது. தானும் பயன் படுத்தாமல் வெறுமனே பொட்டலம் கட்டி வைப்பதால் யாருக்கு என்ன பயன். மழை நீர் மீண்டும் மழையாக மாறுவதற்கு முன் அதனால் பலருக்கு பலவிதமான பலனை கண்டிப்பாக அளிக்கும். மாறாக குட்டையில் தேக்கி வைத்தால் விரைவில் நாற்றமெடுத்து நஞ்சாகி அதனின் மகிமையை அது இழந்துவிடும். நமது செல்வங்களும் அது போல.ஏதோ இறைவன் நம்மை ஆசீர்வதித்து நேரிய வழியில் வழிநடத்துவாராக.
சசிகலா சதி செய்து தன் பங்களாவை கபளீகரம் செய்து விட்டதாக கூறும் இவர் அப்போதே ஏன் இதை அம்பலப்படுத்தி நீதி கேட்கவில்லை? இப்போது ஆர்.கே நகரில் (ஒருவேளை) வென்று வந்து விட்டால் இவர் கவனம் சசிகலாவை திட்டுவதிலும் தன் பங்களாவை மீட்பத்லும் மட்டுமே இருக்கும். மாறாக தொகுதி மக்களுக்கு ‘பெரிதாக’ ஏதும் செய்திட வாய்ப்பில்லை. ஆனால் இவருக்கும் இளையராஜாவுக்கும் தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் காலூன்றவே இவரை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பது ‘கங்கை’ அமர்சிங்குக்கும் தெரியும். காலம் சொல்லப்போகும் தெளிவான பதில் இந்த இடைத்தேர்தல் முடிவின்வழி தெரியும்.
என்கருத்துமாறுப்பட்டுள்ளது கங்கைஅரனை
பஜக தூண்டில்பழுவாககோர்த்து
போட்டுநோட்டம்பார்குது!
நண்பரே! அப்போதே அவர் அம்பலப்படுத்தினார். ஆனால் ஜெயலலிதா அரசு காவல்துறையை வைத்து பயமுறுத்தி பிரச்னையை அடக்கிவிட்டது!