இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்

protest-against-ilayarajaதான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என இளையராஜா அவர்கள், பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், பாடகர் சரன் மற்றும் பாடகி சித்ரா ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவின் இந்த செயல் குறித்து அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் விமர்சனம் செய்துள்ளார்.

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள்தனமானது. நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

இதற்கிடையில் இளையராஜாவின் சட்ட ஆலோசகர் கூறியதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் பாடி பலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

எனவே அவர் பாடல்களைப் பாடி பணம் சம்பாதிப்பதைத் தடுக்கவே எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com

பணத்தாசை பிடித்து அலையும் இளசு: மேடையில் பாடினால் ராயாலிட்டி கேட்டு தொந்தரவு

இளசு பல நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசை அமைத்து, அந்த நாள் முதல் இந்த நாள் வரை கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்துள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்தேன் என்று மேடைகளில் அடிக்கடி கூறி மக்கள் கை தட்டல்களை வாங்கி அவர்களுக்கு உணர்ச்சி உசுப்பேத்திய இளசு. தற்போது பணத்தாசை பிடித்து அலைந்து திரிகிறார் என்று பலர் கூறி வந்தார்கள். ஆனாலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் தற்போது பாலா திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவருக்கு மதிப்புகொடுக்கும் வகையில் பல நாடுகளில் அவர் நிகழ்சிகளை அவரது மகன் நடத்தி வருகிறார்.

இன் நிலையில் தான் இசை அமைத்த பாடல்களை மேடைகளில் பாடினால், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று இளசு பாலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதோடு. ஒரு பாட்டுக்கு இவ்வளவு என்று கூறி காசைகேட்டு நச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது போக இனி பாடினால் பிரச்சனை வரும் என்று கூறி வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பியுள்ளார் இளசு. என்ன கொடுமை. இசை அமைத்து அதில் சம்பாதித்து. பின்னர் அதனை ரக்காட்டில் வெளியிட்டு அதில் சம்பாதித்து. இப்ப அதனை யாராவது பாடினால் கூட தனக்கு காசு வரவேண்டும் என்று இவ்வாறு இசையை கூறு போட்டு விற்க்கும் ஈனச் செயலில் இறங்கிவிட்டார்.

இந்த காலத்தில் பணத்திற்காக பிணத்தை கூட தின்ன தயங்கமாட்டார்கள் போல உள்ளதே.. உலகம் எங்கே செல்கிறது ?

-http://www.athirvu.com

எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் பல மொழிகளில் தன் குரல்வளத்தால் அனைவரையும் கட்டிப்போட்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

50 வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் தற்போது எஸ்பிபி50 என்ற பெயரில் உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரிக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனக்கும், சித்ராவுக்கும் மற்றும் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இளைஞானி இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.

அதில் இளையராஜா இசையமைத்த பாடலை மேடைகளில் பாடக்கூடாது என்றும் மீறினால் மிகப்பெரிய தொகையை அபராதமாக கட்டவேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

கடந்தவருடம் கனடாவில் தொடங்கி மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் நடத்திய போது எதுவும் சொல்லாத இளையராஜா அமெரிக்காவில் ஏன் இப்படி செய்கிறார் என தெரியவில்லை.

இதனால் இனி அவரின் இசையில் வந்த பாடலை பாடமாட்டேன். அதைத்தவிர மற்ற எனது பாடல்களை பாடவிருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் ஒத்துழைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடல் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை! இளையராஜாவுக்கு மதன் கார்க்கி பதிலடி

தன்னுடைய பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி மேடையில் பாடக்கூடாது என இளையராஜா பிரபல பாடகர்களான பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது ஏன் இப்படி செய்கிறார் என பலரும் அதிர்ச்சி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி “பாடல்களின் ராயல்டி இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை. அந்த பாடலை எழுதியவர் மற்றும் தயாரித்தவருக்கும் உரிமையுண்டு.”

“இளையராஜாவே மேடையில் அவரின் பாடல்களை பயன்படுத்தவேண்டும் என்றாலும் பாடலாசிரியர், தயாரிப்பாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும்”

“இளையராஜா செய்தது சட்டப்படி சரி என்றாலும், இந்த பிரச்னையை அவர் ஒரு போன் கால் செய்து முடித்திருக்கலாம்” என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

-http://www.cineulagam.com