இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது; கலைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் – மிஸ்கின் பேச்சு

ilayaraaja

இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை பிரச்சனையை நாங்கள் வரவேற்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் அணியினர் தெரிவித்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி விஷால் அணியினர்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா பேசும் போது, ’’தேர்தலில் நிற்கும் நாங்கள் 12 வாக்குறுதிகளை தந்துள்ளோம். இதனை 1 வருடத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம்’’ என்றார்.

துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ்ராஜ் பேசும்போது,  ‘’இதுவரை பதவியில் இருந்தவர்கள் வேலை செய்யவில்லை. குறிப்பிட்டவர்களே பதவி வகித்து வந்தார்கள். தவறு நடக்கும் போது பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவேதான் போட்டியிட வந்தோம் என்று கூறினார்.  இளையராஜவை வைத்து மிகப்பெரிய பாடல் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்’’ என்றும் கூறினார்.

கௌரவ செயலாளர் மிஷ்கின் கூறும்போது, ‘’200 தயாரிப்பாளர்கள் வறுமையில் உள்ளனர்.  இவர்களுக்கு நல்லது செய்யாவிட்டால் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகி கொள்வோம்.  இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளதை நாங்கள் பாராட்டுகிறோம்.  சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். இளையராஜாவை பொறுத்தை வரையில் அவர் பாடல்களுக்கு அவர் மட்டுமே சொந்தம். அவர் கலைஞர்களுக்காகத் தான் இதை பேசியிருக்கிறார். இளையராஜா சார் சொன்ன மாதிரி நடந்திருந்தால் ஒவ்வொரு தயாரிப்பாளரும் கோடிஸ்வராக இருந்திருப்பார். வின்னார் ஒரு படம். அதில் நடித்த வடிவேல் காட்சியை எத்தனை முறை போட்டிருப்பார்கள். அந்த தயாரிப்பாளருக்கு தினம் ஒரு ரூபாய் கொடுத்திருந்தால் அவர் கோடிஸ்வரராக இருந்திருப்பார்.  காப்பிரைட் என்பது முக்கியமானது. அதற்கு இளையராஜா கையில் எடுத்திருப்பதை வரவேற்கிறோம்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாண்டிராஜ் பேசம் போது,  ‘’உறுப்பினர்கள்  அனைவரையும் தாய்மாமன்களாக நினைத்து நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறோம். விஷால் அணியில் நான் இருந்து போட்டியிட்டாலும், இந்த அணியை அதிகம் கேள்வி கேட்பவன் நானாகதான் இருப்பேன் என்று கூறினார்.  தயாரிப்பாளராக, இயக்குநர்களாக இருந்து பண்ண முடியாததை நடிகராக இவர்கள் சாதிக்கிறார்கள். நடிகராக மட்டும் இல்லை தயாரிப்பாளர் இயக்குநர்  இருக்கிறார்கள்  இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் சாதிப்பார்கள். .

தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் பேசும்போது,  ‘’தமிழகத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறோம். வாக்கு கேட்கவில்லை. இது திரைப்படதுறையை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அனைத்து திரைப்பட தயாரிப்பிற்கும் நாங்கள் வழிகாட்டுவோம். எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இனி தயாரிப்பா ளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் இணைந்து செயல்படுவோம். நலிவடைந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படமெடுக்க வைப்பதே எங்களின் குறிக்கோள்’’ என்று கூறினார்.

– ஜெ.டி.ஆர்.

-http://nakkheeran.in

பாடல்கள் விவகாரம் குறித்து இளையராஜா, பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இளையராஜாவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இளையராஜா தரப்பில் இருந்து காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

எங்களது கேள்வி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியை தொடர்கிறோம். இது எஸ்.பி.பிக்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல, உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால் சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

-http://www.cineulagam.com