இந்திய தலைநகர் டில்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகள் ஒன்று அனாதைகள் இல்லை என நடிகர் விவேக் காரசாரமாக விமர்சனம் செய்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர்.
நேற்று முன் தினம் நடிகர் விஷால், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டியராஜ் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் சென்று தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
இந்நிலையில் கொமடி நடிகரான விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார்.
அதில், முல்லை பெரியாறு, பவானி ஆறு, தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு, கண்டலேறு, கிருஷ்ணா ஆறு!எல்லோரும் கைவிட்டுவிட்டால் தமிழகம் வாழ்வது எவ்வாறு? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை அனாதைகள் போல் நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க கூடாது என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைப் போய் பார்த்தீர்களா? கமல்ஹாசன் ட்வீட் பண்ணினால் நீங்களும் செய்ய வேண்டுமா? நேராகப் பார்த்துப் பேசுங்களேன்!
தமிழர்கள் தில்லியில் மிகவும் கேவலமாக போராட்டம் நடத்தவேண்டி உள்ளது. தமிழ் நாடு இன்னும் தூங்கி கொண்டிருக்கிறது– தமிழ் நாட்டு அரசு மக்களை அடக்க காவலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது– கேவலம்.