சென்னை: சென்னை வந்துள்ள மலேஷிய பிரதமர் முகமது நஜீப் பின் துன் அப்துல் ரசாக் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியாவில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமர், முதல்கட்டமாக சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இரண்டு நாட்கள் சென்னையில் தங்கவுள்ள அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ரஜினியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மலேசிய அதிகாரிகள் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். உலக அளவில் ரசிகர்களை ஈர்த்த கபாலி படத்தின் பெரும்பகுதி மலேஷியாவில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினியை மலேசிய பிரதமர் ரஜாக் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை வந்துள்ள ரஜாக் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிக்க மகிழ்ச்சி . இனி ம இ க இந்தியர்களின் வோட்டை வீடு வீடுக பிட்சை கேட்டு கூத்தாட தேவையில்லை .
இவர்களின் போஸ்டர் மலேஷியா எல்லா இந்தியர்களின் வீட்டுக்கு இலவசமாக அனுப்பிவையுங்கள் இது போதும் .
மலேசிய இந்தியர் பொருளாதாரம் கிடு கிடுவென உயர்வு காணும் என்று நம்பலாம் !
மலேசியத் தமிழ் மூட ரசிகனே விழித்துக்கொள்.
நம்பிக்கை நாயகனுக்கு தமிழர்களை பற்றி நன்றாகவே தெரிந்து இருக்கிறது- நாம் எவ்வளவு மடையர்கள் என்றும் சூடு சொரணை அற்றவர்கள் என்றும் குடிகாரர்கள் என்றும் சினிமா பைத்தியங்கள் என்றும். அதிலும் “சூxxx ஸ்டார்” பைத்தியங்களை பற்றியும் தெரிந்து இருக்கிறது– தேர்தல் 14 க்கு அடி போட்டு விட்டான்.
எவன் காலுல விழுறது தெரியல …… அதான் …