சொல்லாதே செய் என்னும் பெயரில் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ள நடிகர் லாரன்ஸ் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்டதுடன் பல உதவிகளையும் செய்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்துக்கு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட மூன்று விவசாயிகள் குடும்பத்தை பார்க்க லாரன்ஸ் வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், முதற்கட்டமாக 25 விவசாய குடும்பத்துக்கு இரண்டு மாடுகள், இரண்டு கன்றுகள், 25 ஆயிரம் ரூபாய் பணம் எல்லாம் கொடுத்தேன்.
பல வீடுகளில் விவசாயிகளின் மனைவிகள் தாலியை அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அதில் 50 குடும்பங்களைத் தேர்வு செய்து அவர்களின் கடனை அடைத்து, அடகு கடையில் உள்ள அவர்களுடைய தாலியை மீட்கும் முயற்சியில் இருக்கிறேன்.
நேற்று கூட இருவர் தாலியை மீட்டு கொடுத்தேன். வறட்சியில் இறந்துபோன 271 விவாசிகளுடைய குடும்பங்களுக்கும் உதவலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
எல்லா மக்களும் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு பண உதவி பண்ணனும். சாப்பாடு போடுற கடவுளான விவசயிகளுக்காக சொல்லாதே செய் என்ற திட்டத்தை ஆரம்பிச்சிருக்கோம், அது மூலம் நிறைய உதவி செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com