முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் – கே பாக்யராஜ்

bagyarajபுதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டு விசிடியால் சினிமாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது 10 சதவீதம்தான்.

ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம்.

திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு காலை காட்சி கொடுத்தால் அவர்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு காலைக் காட்சி கொடுத்தால்கூட அவர்களுக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்.

ஆனால் புதிய நடிகர்களுக்கு அப்படியில்லை, அவர்களின் படங்களுக்கு மாலைக் காட்சிகள் கொடுத்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்,” என்று கூறினார் .

-cineulagam.com